Video: ஒரு பந்தில் 6 ரன்கள் தேவை..! பந்தை தொடாமலேயே வெற்றி பெற்ற அணி

வெற்றிக்கு பின்னர் தோல்வியடைந்த அணியின் கேப்டன் அந்த பவுலரை வார்த்தைகளால் வறுத்தெடுத்த காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

news18
Updated: January 9, 2019, 11:39 AM IST
Video: ஒரு பந்தில் 6 ரன்கள் தேவை..! பந்தை தொடாமலேயே வெற்றி பெற்ற அணி
போட்டியின் ஒரு காட்சி
news18
Updated: January 9, 2019, 11:39 AM IST
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளூர் கிளப் அணி போட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 1 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலரின் கருணையால் பந்தை தொடாமலேயே எதிரணி வெற்றி பெற்றது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் ஆதர்ஷ் கிரிக்கெட் கிளப் என்ற உள்ளூர் கிளப் இயங்கி வருகிறது. அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த கிளப் நடத்திய கிரிக்கெட் போட்டியின் கிளைமேக்ஸ் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

தெசாய் மற்றும் ஜுனி தோம்பிவ்லி என்ற இரு உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 5 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜூனி அணி 75 ரன்கள் எடுத்தது. பின்னர், பேட்டிங் செய்த தெசாய் அணி இறுதியில் 70 ரன்களை எடுத்திருந்த போது, ஒரு பந்து மட்டுமே மீதம் இருந்தது.

Loading...
சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், பேட்ஸ்மேன் நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால், மிக கூலாக பந்து வீசிய பவுலர் கடைசி ஒரு பாலை போடுவதற்குள் 6 ஒய்டுகள் போட்டு எதிரணியை வெற்றிபெற வைத்தார்.

வெற்றிக்கு பின்னர் தோல்வியடைந்த அணியின் கேப்டன் அந்த பவுலரை வார்த்தைகளால் வறுத்தெடுத்த காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...