• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பையெல்லாம் சும்மா-50 ஓவர் உலகக்கோப்பைதான் பெஸ்ட், - கவுதம் கம்பீர்

டி20 உலகக் கோப்பையெல்லாம் சும்மா-50 ஓவர் உலகக்கோப்பைதான் பெஸ்ட், - கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

என்ன சொன்னாலும் 50 ஓவர் உலகக்கோப்பைதான் சிறந்தது, டி20 உலகக்கோப்பை ஒரு நீர்த்துப் போன வடிவம்தான் என்று கவுதம் கம்பீர் திடீரென இதில் உள்ள விளம்பரத்துக்கு எதிராகக் கூறியது போல் தெரிகிறது.

  • Share this:
    இத்தனைக்கும், 2007-ல் முதன் முதலில் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பிறகே இந்த டி20 வடிவத்துக்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் கிடைத்தது, நம்மூர் தோனி, சேவாக், கம்பீர் ஆகியோரது வணிக மதிப்புகளும் எகிறியது, அதுவும் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்தால் வர்த்தக உலகத்தின் மகிழ்ச்சியை சொல்ல வேண்டியதில்லை. இந்த உலகக்கோப்பையை வென்ற போது கவுதம் கம்பீர் அணியில் முக்கிய வீரர்.

    ஆனாலும் கவுதம் கம்பீர் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார், ஆனால் தோனியின் அந்த சிக்ஸ் இல்லாவிட்டால் இந்தியா ஏதோ தோற்றிருக்கும் என்பது போல் தோனியின் பெயர் கவுதம் கம்பீர் இன்னிங்சை இருளுக்குள் தள்ளியது. கம்பீரே ஐசிசி ஒருமுறை தோனியின் அந்த ஐகானிக் சிக்சைப் போட்டு இந்தியா உலகக்கோப்பை வென்ற நாள் என்று போட்டபோது, கம்பீர் கடுப்பாகி ரியாக்ட் செய்தார். அப்பா ஐசிசி நானும் அந்த மேட்சில 97 ரன்கள் எடுத்திருக்கேன் என்று தன் அழுக்குப்படிந்த அந்த சீருடையுடம் படம் போட்டுக் காட்டினார்.

    இந்நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் எனும்போது, நமக்கு அதன் மேல் ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது, ஆனால் 20 ஓவர் உலகக்கோப்பை அடிக்கடி நடத்தப்படும்போது அது நீர்த்துப் போகச் செய்து விடுகிறது என்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

    “1981-ல் பிறந்து 90களில் கிரிக்கெட் ஆட்டங்களை 90-களில் பார்த்து, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதை நினைக்கும்போது அதுதான் சிறந்த பரிசு என்று தோன்றுகிறது, டி20 உலகக்கோப்பை வெற்றியை விட 50 ஓவர் உலகக்கோப்பைதான் பெரிது. டி20 உலகக்கோப்பை இப்போது நடைபெறுகிறது, மீண்டும் அடுத்த ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

    சரி! கோவிட் காய்ச்சலினால் ஷெட்யூலெல்லாம் கண்டபடி மாறிவிட்டது ஒப்புக் கொள்கிறேன். ஆனால் முந்தைய 50 ஓவர் உலகக்கோப்பையை ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு டி20 உலகக்கோப்பையை நினைவில் வைத்துக் கொள்வார்களா என்பது ஐயமே. மேலும் இப்போது சாம்பியன் ஆனால் அடுத்த ஆண்டே தோற்று சாம்பியன் கோப்பையை இழப்பது எப்படி? 3 ஆண்டுகளாவது ஒரு அணி கோப்பையின் நினைவுகளுடன் இருக்க வேண்டாமா?

    ஐசிசி உலகக்கோப்பை டி20-யின் இந்திய போட்டிகள் வருமாறு:

    அக்.24, இந்தியா-பாகிஸ்தான், துபாய் இரவு 7:30

    அக்டோபர் 31, இந்தியா-நியூசிலாந்து, துபாய் 7:30

    நவம்பர் 3, இந்தியா-ஆப்கான் - அபுதாபி 7:30

    நவம்பர் 5, இந்தியா-பி1- துபாய், 7:30

    நவம்பர் 8, இந்தியா - ஏ2, துபாய் 7:30

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: