சச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்!

Vijay R | news18
Updated: July 19, 2019, 10:40 PM IST
சச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' பெற்ற 5 இந்திய ஜாம்பவான்கள்!
சச்சின் டெண்டுல்கர்
Vijay R | news18
Updated: July 19, 2019, 10:40 PM IST
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர்க்கு ஐசிசி 'ஹால் ஆஃப் பேம்' விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கருடன் மேலும் 3 பேருக்கு 'ஹால் ஆஃப் பேம்' விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனல்டு, ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டது.






ஐசிசி 'ஹால் ஆஃப் பேம்' விருதை கடந்த 2009ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்த விருதினை பெற பேட்ஸ்மேனாக இருந்தால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ரன்கள், 8 சதங்கள் அடித்திருக்க வேண்டும்.

இதே போன்று பந்துவீச்சாளராக இருந்தால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 200 விக்கெட்களை வீழ்த்தியிருக்க வேண்டும். மேலும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட இருக்கும் வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அணியில் சச்சினுக்கு முன் 'ஹால் ஆஃப் பேம்' விருது பெற்ற 5 வீரர்கள்

2009 - பிஷான் சிங் பேடி, சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்

2009 - கபில் தேவ் சிறந்த ஆல் ரவுண்டர். உலகக் கோப்பையை இந்திய அணிக்கு முதல் முறை வென்று தந்த தலைசிறந்த கேப்டன்

2009 - சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக இருந்தவர். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர்

2015 - அனில் கும்ளே , சிறந்த சுழற்பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் 613 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்

2018 - ராகுல் டிராவிட். சர்வதேச போட்டிகளில் 25,000 ரன்களை கடந்தவர். விளையாட்டின் உயரிய விருதான அர்ஜூனா, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...