முகப்பு /செய்தி /விளையாட்டு / தொடர்ந்து 5 ஆண்டுகள் அசைக்க முடியா நம்பர் 1 இடத்தில் இந்திய அணி: வெஸ்ட் இண்டீசுக்கு கீழே சரிந்த தென் ஆப்பிரிக்கா

தொடர்ந்து 5 ஆண்டுகள் அசைக்க முடியா நம்பர் 1 இடத்தில் இந்திய அணி: வெஸ்ட் இண்டீசுக்கு கீழே சரிந்த தென் ஆப்பிரிக்கா

கவாஸ்கர்- கோலி

கவாஸ்கர்- கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்தியா நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துள்ளது. தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் நம்பர் 1 இடத்தில் இந்திய அணி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

121 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது, அதாவது 24 போட்டிகளில் 2914 புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்திய அணி. இந்திய அணியை நெருக்கமாகப் பின் தொடரும், நம்மை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் சந்திக்கும் நியூஸிலாந்து 120 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. 18 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி 2,166 புள்ளிகளை ஈட்டியது.

ஆஸ்திரேலியாவை (108) 4ம் இடத்துக்குப்பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து (109) மூன்றாம் இடத்தில் உள்ளது. 94 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 இடங்கள் முன்னேறி 6ம் இடத்துக்கு முன்னேறியது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் கீழே சென்று தென் ஆப்பிரிக்க அணி (80) 7ம் இடத்திலும் இலங்கை (78) 8-ம் இடத்திலும் உள்ளன. பங்களாதேஷ் (46) 9ம் இடத்திலும் ஜிம்பாப்வே (35) 10ம் இடத்திலும் உள்ளன.

விராட் கோலி!

இந்தியாவும் நியூசிலாந்தும் ஜூன் 18-22-ல் இங்கிலாந்தில் உள்ள ஏஜியஸ் பவுலில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் மோதுகிறது.

2017-18 டெஸ்ட் முடிவுகள் நீக்கப்பட்ட பிறகு இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 5 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் உள்ளது விராட் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி. ரஹானே ஆஸ்திரேலியாவில் இளம் அணியை வைத்து கொண்டு 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு தொடரை வென்றது மிகப்பெரிய வெற்றி ஆகவே அவரையும் விராட் கோலியுடன் சேர்த்துக் குறிப்பிடுவதே பொருந்தும்.

2013, 14, 15 என்று 3 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக கோலோச்சியது, இப்போது வெஸ்ட் இண்டீஸுக்குக் கீழ் சென்று 7ம் இடத்தில் உள்ளது. 2016-ல் நம்பர் 1 இடத்தை தென் ஆப்பிரிக்க அணியிடமிருந்து ஆஸ்திரேலியா பறித்தது. ஆனால் அதன் பிறகு விராட் கோலி படை ராஜ்ஜியம்தான்.

கோலி.

நியூஸிலாந்தை 3-0 என்று வீழ்த்தி இங்கிலாந்தை 2016-17-ல் 4-0 என்று காலி செய்து ஆஸ்திரேலியாவை 2-1 என்று வென்ற பிறகு 2017-ல் இலங்கைக்குச் சென்று 3-0 என்று ஒயிட்வாஷ் அளித்தது. இதனையடுத்து 2017-18-லும் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகித்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் வரிசையாக உள்நாட்டு தொடரில் ஒரு அணி ஆட முடியுமா என்ற கேள்வி எழுந்தது, ஆனால் அப்போது கோலி பில்ட் அப் தொடங்கியிருந்ததால் யாரும் இதைப் பெரிது படுத்தவில்லை.

2018-19 சீசனில் மே.இ.தீவுகளை இந்தியாவில் தோற்கடித்து பிறகு ஆஸ்திரேலியா சென்று 2-1 என்று ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே நொறுக்கி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் துணைக்கண்ட அணி என்று துணைக்கண்டத்திற்கே பெருமை சேர்த்தார். பிறகு நியூஸிலாந்தில் டெஸ்ட் தொடரை 2-0 என்று இழந்தது, பிறகு மீண்டெழுந்து மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்று ரஹானே தலைமையில் கைப்பற்றி பிறகு இந்தியாவில் இங்கிலாந்து அணியை கோலி பதம் பார்த்தார். சென்னை, அகமதாபாத் குழிப்பிட்ச்களில் வெற்றி வாகை சூடினார்.

First published:

Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, ICC Ranking