முகப்பு /செய்தி /விளையாட்டு / 4 ஆண்டுகளாக நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர்… பேட் கம்மின்ஸிடமிருந்து பட்டத்தை தட்டிப் பறித்த 40 வயது ஆட்டக்காரர்

4 ஆண்டுகளாக நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர்… பேட் கம்மின்ஸிடமிருந்து பட்டத்தை தட்டிப் பறித்த 40 வயது ஆட்டக்காரர்

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 864 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கடந்த 4 ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டிருந்த நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்ற  பெருமையை இங்கிலாந்தை சேர்ந்த 40 வயது ஆட்டக்காரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தட்டிப் பறித்துள்ளார்.  டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 858 புள்ளிகளுடன் கம்மின்ஸ் 3ஆவது இடத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 864 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 866 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ச்சியாக அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் கூடுதல் புள்ளிகளைப் பெற்று அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டெஸ்ட் பவுலர்களுக்கான தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளோம். இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடமிருந்து முதலிடத்தை தட்டிப் பறித்துள்ளார்.’ என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் 682 விக்கெட்டுகளை ஆண்டர்சன் கைப்பற்றியுள்ளார். முத்தையா முரளிதரன் (800 விக்கெட்), ஷேன் வார்னே (708 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆவது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார். இதே ஃபார்மில் அவர் தொடர்ந்து விளையாடினால் வார்னேவின் சாதனையை அவர் முறியடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அதிக வயதான பவுலர் என்ற சாதனையையும் ஆண்டர்சன் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு தற்போது 40 வயது மற்றும் 207 நாட்கள் ஆகின்றன. முதலிடத்தை ஆண்டர்சன் பிடித்திருந்தாலும், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அஷ்வின் 2 புள்ளிகள் மட்டுமே குறைந்துள்ளார். அடுத்து 2 டெஸ்ட்களில் அஷ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதால், அவர் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்றும் கூறப்படுகிறது.

First published:

Tags: Cricket