• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நாங்களும் வந்துட்டுருக்கோம்னு சொல்லு: டி20-யில் இலங்கைக்கு 3-0 ஸ்வீப் கொடுத்த தென் ஆப்பிரிக்கா

நாங்களும் வந்துட்டுருக்கோம்னு சொல்லு: டி20-யில் இலங்கைக்கு 3-0 ஸ்வீப் கொடுத்த தென் ஆப்பிரிக்கா

சாம்பியன் தென் ஆப்பிரிக்கா

சாம்பியன் தென் ஆப்பிரிக்கா

உலகக்கோப்பை டி20 நெருங்கி வரும் வேளையில் எங்களையும் சும்மா நினைச்சுடாதீங்க என்று கூறுமாறு தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு 3-0 ஸ்வீப் தோல்வியைக் கொடுத்து டி20 தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    கொழும்புவில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இலங்கையை 120 ரன்களுக்கு மடக்கிய தென் ஆப்பிரிக்கா பிறகு இலக்கை விரட்டிய போது 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை விரட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது, குவிண்டன் டி காக் 59 ரன்களையும் ரீசா ஹென்றிக்ஸ் 56 ரன்களையும் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

    தென் ஆப்பிரிக்க பவுலர் ஜோன் போர்ட்டுயின், கேகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி 120/8 என்று எழும்ப முடியாமல் முடங்கியது. இந்த வெற்றி மூலம் 7 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று தென் ஆப்பிரிக்கா நாங்களும் வந்துட்டுருக்கோம்னு சொல்லு என்று மற்ற கிரிக்கெட் அணிகளுக்கு சவால் விடுத்துள்ளது. மேலும் 3வது தொடரை தொடர்ச்சியாக வெல்கிறது தென் ஆப்பிரிக்கா.

    கேப்டன் கேஷவ் மகராஜ் கூறும்போது, வீரர்களுக்கே முழுப்பெருமை சேர வேண்டும். ஒருநாள் தொடரில் தோற்ற பிறகே டி20-யில் கிளீன் ஸ்வீப் என்பது பெரிய கம் பேக், என்றார். இது உலகக்கோப்பை டி20--க்கு நல்ல தயாரிப்பு என்கிறது தென் ஆப்பிரிக்கா. குவிண்டன் டி காக் 2வது டி20 போட்டியில் மேட்ச் வின்னிங் 58 ரன்களை எடுத்த பிறகு கடைசிபோட்டியிலும் அரைசதம் விளாசினார். ஹென்றிக்ஸ் தன் 7வது அரைசதத்தை எடுத்தார். இதில் 5 பவுண்டரி ஒரு பெரிய சிக்ஸ் அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் ரபாடா கலக்கினார், தன் வேகத்தினால் இலங்கை டாப்ப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார். இலங்கையின் சிறந்த வீரர்கள் அவிஷ்கா பெர்னாண்டோவை 12 ரன்களில் வீட்டுக்கு அனுப்பிய ரபாடா பிறகு பனுகா ராஜபக்சவின் ஸ்டம்பை பெயர்த்தார். போர்ட்டுயின் தனஞ்ஜயாவை 1 ரன்னில் ஸ்டம்ப்டு முறையில் காலி செய்தார். வனிந்து ஹசரங்காவை 4 ரன்களில் வீழ்த்தி வெளியேற்றினார் போர்ட்டுயின்.

    தொடக்க வீரர் குசால் பெரேரா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்து கேசவ் மகராஜிடம் விழுந்தார். இலங்கை அணி 86-7 என்று சரிந்தது, ஆனால் சமிகா கருண ரத்னே 19 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க இலங்கை 120 ரன்களை எட்டியது. ஒருநாள் தொடரை 2-1 என்று வென்ற இலங்கை டி20 தொடரை உலகக்கோப்பைக்கு முன்னால் இழந்தது அவர்களது தன்னம்பிக்கைக்கு விழுந்த அடியாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: