ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பேக் அப் பவுலர்கள் இல்லாமல் களத்தில் இறங்கிய இந்திய அணி… துணிவான முடிவை எடுத்தாரா ரோஹித் சர்மா?

பேக் அப் பவுலர்கள் இல்லாமல் களத்தில் இறங்கிய இந்திய அணி… துணிவான முடிவை எடுத்தாரா ரோஹித் சர்மா?

இந்தியா ப்ளேயிங் 11

இந்தியா ப்ளேயிங் 11

குறைவான ரன்களை இந்தியா எடுத்தால், பேக் அப் பவுலர்கள் இல்லாத சூழலில் அது இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் அதிகம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 3 ஸ்பின்னர்கள் மற்றும் பேக் அப் பவுலர்கள் யாருமின்றி இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் 2 மாற்றங்களை கேப்டன் ரோஹித் சர்மா செய்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமாருக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்திய அணி தொடரை கைப்பற்றி இருப்பதால் 2 போட்டிகளிலும் இடம் பெறாதவர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படாத சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகீயோர் இடம்பெற்றுள்ளனர். 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 6 பேட்ஸ்மேன்களுடன் இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது.

இந்த போட்டியில் பவுலிங் யூனிட்டில் மொத்தம் 5 பவுலர்கள் மட்டுமே உள்ளனர். மாற்று பந்து வீச்சாளர்கள் எனப்படும் பேக் அப் பவுலர்கள் யாருமின்றி ஆடும் லெவனை ரோஹித் சர்மா தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் ஆல் ரவுண்டராக இருந்த ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்த்து 6 பவுலர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த போட்டியில் தேவைப்பட்டால் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா பந்து வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…

ஒருவேளை குறைவான ரன்களை இந்தியா எடுத்தால், பேக் அப் பவுலர்கள் இல்லாத சூழலில் அது இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ரோஹித்தின் இந்த முடிவை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: Cricket