உலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..!

உலகக் கோப்பைத் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் வரும் 22-ம் தேதி இங்கிலாந்து புறப்பட உள்ளனர்.

உலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..!
World Cup 2019
  • News18
  • Last Updated: May 20, 2019, 10:08 PM IST
  • Share this:
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.

இந்தத் தொடரில் புள்ளிப் பட்டியல் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாகவும் மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி ஆட்டங்களில் வெற்றி பெற்றும் தேர்வு செய்யப்பட்டது. 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்கொள்ள வேண்டும். முதல் போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

உலகக் கோப்பைத் தெடாருக்கான வீரர்களை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன. உலகக் கோப்பைத் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் வரும் 22-ம் தேதி இங்கிலாந்து புறப்பட உள்ளனர்.


Also Watch :வைரல் வீடியோ: தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து பிரபலமான இங்கிலாந்து வீரர்!

உலகக் கோப்பைக்கு முன் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் 1 டி20, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் ஒரு நாள் போட்டி மட்டும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மற்ற அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

உலகக் கோப்பைக்கு முன் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் மிகப் பெரிய தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்தை பெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சில் மிகவும் சொதப்பி வருவதாக கருத்து நிலவியது.Also Watch :அணியின் வெற்றிக்காக போராடியதில் வாட்சனை மிஞ்சிய இங்கிலாந்து வீரர்!

இதனையடுத்து உலகக் கோப்பைத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு தலைவர் இன்சாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜூனைத் கான், பஹீம் அஷ்ரப், அபித் அலி ஆகியோர் நீக்கப்பட்டு ஆசிப் அலி, வகாப் ரியாஸ், முகமது அமீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவைப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Watch :வைரல் வீடியோ : வாய்விட்டு சிரிக்க வைத்த சோகிப் மாலிக்கின் ஹிட் அவுட்!

Also Watch :Video: உலகக்கோப்பையில் இதை மறக்க முடியுமா? அமீர் சோஹல் சேட்டையை அடக்கிய வெங்கடேஷ் பிரசாத்

Also Watch :இந்திய வீரரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்

Also Watch :#ICCWorldCup2019: சச்சினின் 16 வருட சாதனையை யாராவது முறியடிப்பார்களா?

Also Watch

First published: May 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading