ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

3 ஸ்பின்னர்கள் இல்லையாம்- மீண்டும் அஸ்வினுக்கு நெருக்கடி?- கோலி பீடிகை

3 ஸ்பின்னர்கள் இல்லையாம்- மீண்டும் அஸ்வினுக்கு நெருக்கடி?- கோலி பீடிகை

Ravichandran Ashwin

Ravichandran Ashwin

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் காலநிலை மாற்றத்தினால் 3 ஸ்பின்னர்களுக்கான தேவை இருக்காது என்று விராட் கோலி கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மும்பையில் இன்று தொடங்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் காலநிலை மாற்றத்தினால் 3 ஸ்பின்னர்களுக்கான தேவை இருக்காது என்று கூறியுள்ள விராட் கோலி கூடுதல் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு என்று சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார், அதே வேளையில் விருத்திமான் சாஹா உடல் தகுதி பெற்றுள்ளார்.

  இங்கிலாந்தில் அஸ்வினை உட்கார வைத்தது போல் மும்பையில் 3 ஸ்பின்னர்கள் அவசியமில்லை என்று கூறியுள்ள கோலி மீண்டும் அஸ்வினை உட்கார வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் அக்சர் படேல் நேர் நேர் தேமா பந்துகளில் கடந்த டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றியதால் அவரை நீக்க முடியுமா என்பது தெரியவில்லை.

  “காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அணிச் சேர்க்கையை தேர்வு செய்ய வேண்டும். காலநிலை 5 நாட்களுக்கும் இப்படியே இருக்குமா என்றும் தெரியாது, எனவே அதற்கேற்றாற்போல் அணித்தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு சூழ்நிலைகளுக்கு தேவையான பவுலிங் காம்பினேஷன் தேவை. இது குறித்த பொதுவான புரிதல் ஏற்படுமேயானால் அனைவரும் ஏற்றுக் கொண்டால் அந்த அணிச்சேர்க்கையை தேர்வுசெய்வோம்” என்று ‘பொது புரிதல்’ அனைவரும் ஏற்றுக் கொண்டால் என்றெல்லாம் பேசுவதைப் பார்த்தால் அஸ்வினை மனதில் கொண்டுதான் அவர் பேசுகிறார் என்று தோன்றுகிறது.

  ரஹானே அணியில் இருப்பாரா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் சுற்றி வளைத்து கோலி பதிலளிக்கையில், “அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதில் தனி வீரர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தனிப்பட்ட வீரர்களிடம் பேசி அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அவர்களை அணுகி நிலைமைகளை விளக்க வேண்டும். கடந்த காலத்திலும் அணிச்சேர்க்கையை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்தே தனிப்பட்ட வீரர்களின் இடமும் முடிவு செய்யப்படும்” என்றார். இதன் மூலம் ஏதாவது புரிகிறதா? ரகானேயிடம் பேசி விட்டு உட்கார வைப்பாரா என்பதும் தெரியவில்லை.

  மேலும், “தனி வீரர்களிடம் இதைப்பற்றி விளக்கியுள்ளோம் அவர்களும் புரிந்து கொள்கிறார்கள். கூட்டு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. இப்போதைக்கு சாஹா ஃபிட் ஆகிவிட்டார். வான்கடே மைதானத்தில் ஸ்பின் பொதுவாக ஆதிக்கம் செலுத்தாது. சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் இங்கு வேகபந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதை மகிழ்ச்சியுடன் செய்துள்ளனர். பேட்ஸ்மென்களுக்கும் இங்கு பேட் செய்வது மிகப்பிடிக்கும். கிரேட் கிரிக்கெட்டிங் விக்கெட்.

  கான்பூர் டெஸ்ட்டில் நாம் அனைத்தையும் முயற்சி செய்தோம். நான் அந்தப் போட்டியைப் பார்த்தேன். நான் அந்த சூழ்நிலையில் இல்லை, எனவே நாம் அனைத்தையும் முயற்சி செய்தோம் என்றே கூறுவேன். ராச்சின் ரவீந்திரா, அஜாஜ் படேல் 10 ஓவர்கள் வரை ஆடி டிரா செய்தது பாராட்டத்தக்கது” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs New Zealand, R Ashwin