இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டி-20 போட்டி... நெருக்கடியில் இந்திய வீரர்கள்

தர்மசாலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

news18
Updated: September 18, 2019, 7:28 AM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டி-20 போட்டி... நெருக்கடியில் இந்திய வீரர்கள்
விராட் கோலி
news18
Updated: September 18, 2019, 7:28 AM IST
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. தர்மசாலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2-வது டி20 போட்டி, மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. மேலும், இந்தப் போட்டி இளம் வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ரிஷப் பந்த், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்களை அடையாளம் காண இந்த போட்டி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது

Also watch

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...