ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 238 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 238 ரன்கள் இலக்கு
சோயப் மாலிக்.
  • News18
  • Last Updated: September 23, 2018, 8:49 PM IST
  • Share this:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தியாவுக்கு 238 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதினாலாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதன், சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.


இவர்கள் இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், எட்டாவது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் யஸ்வந்தர் சாஹலை, கேப்டன் ரோஹித் அழைத்தார். எதிர்பார்த்தது போலவே, அந்த ஓவரின் கடைசிப் பந்தில், இமாம்-உல்-ஹக், எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஃபகர் ஸ்மான் 31 ரன்களுக்கு குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்பு பாபர் அஸாமும் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதும், சோயப் மாலிக்கும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
ஸ்ர்ஃபராஸ் 44 ரன்களிலும், சோயப் மாலிக் 78 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
First published: September 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்