TNPL கிரிக்கெட் தொடரில் 225 கோடி ரூபாய் சூதாட்டம்... 2 அணிகளை தடை செய்ய பிசிசிஐ உத்தரவு...!

TNPL கிரிக்கெட் தொடரில் 225 கோடி ரூபாய் சூதாட்டம்... 2 அணிகளை தடை செய்ய பிசிசிஐ உத்தரவு...!
TNPL
  • Share this:
திண்டுக்கலில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இளம் வீரர்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கு ஐ.பி.எல் பாணியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை கடந்த 2016 ம் ஆண்டு அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்திருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.


திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் ஜூலை 20 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் மதுரை அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது. இந்த போட்டியின் போது, 225 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபெஸ்ட்ஃபேர் என்னும் இணையளம் மூலம் இந்த சூதாட்டம் நடைபெற்றதாக ஊழல் தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது.

அத்துடன் தூத்துக்குடி அணிகள் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் அதிக தொகைக்கு சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இரண்டு அணிகளுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, அந்த அணிகளை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனவும் தலைவர் கங்குலி பரிந்துரை செய்திருந்தார். ஆனாலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடர்ந்து நிராகரிப்பதுடன் நடவடிக்கை எடுக்கவும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, பிசிசிஐயின் வழிகாட்டுதல்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 225 கோடி ரூபாய் சூதாட்டத்தில் அணி நிர்வாகிகளுக்கும், வீரர்களும் உள்ள தொடர்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading