ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 World Cup : 21 இன்னிங்ஸ்... 12 அரைசதம்.. உலக சாதனை வாசலில் விராட் கோலி!

T20 World Cup : 21 இன்னிங்ஸ்... 12 அரைசதம்.. உலக சாதனை வாசலில் விராட் கோலி!

விராட் கோலி

விராட் கோலி

Virat Kohli | விராட் கோலி தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் ஆவார். கோலி 111 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3856 ரன்கள் எடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை தேடித் தந்தார். விராட் கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் 73 ரன்களும், சூர்ய குமார் யாதவுடன் 95 ரன்களும் உடைக்காத மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி புதிய உலக சாதனையை நெருங்கியுள்ளார்.

  ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் விராட் கோலியின் தொடர்ச்சியாக இரண்டாவது அரைசதம் இதுவாகும். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தமாக 989 ரன்கள் அடித்துள்ளார். 23 போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை எடுத்துள்ளார். இன்னும் 11 ரன்கள் அடித்தால் டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெறுவார். நடப்பு உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் 144 ரன்கள் குவித்துள்ளார் கோலி.

  Also Read : யுவராஜ் சிங் என்னை விட மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்... நெதர்லாந்து வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா பதில்

  இந்த தொடரில் விராட் கோலி 28 ரன்கள் எடுத்தால் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது அவரை விட இலங்கையின் ஜாம்பவான் வீரர் ஜெயவர்த்தனேமட்டுமே முன்னிலையில் உள்ளார். ஜெயவர்த்தனே டி20 உலகக் கோப்பையில் 31 போட்டிகளில் மொத்தம் 1016 ரன்கள் எடுத்துள்ளார், இதில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தது சிறந்த ஸ்கோராகும். டி20 உலகக் கோப்பையில் 138.45 ஸ்ட்ரைக் ரேட்டாகும்.

  33 வயதான விராட் கோலி தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் ஆவார். கோலி 111 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3856 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் கோஹ்லிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். ரோஹித் 144 போட்டிகளில் 3794 ரன்கள் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் கோஹ்லி 12 அரைசதங்கள் அடித்துள்ளார், அதே நேரத்தில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 36 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup, Virat Kohli