சினிமாவுக்கு வாரிசு துணிவு மோதல் எப்படியோ கிரிக்கெட்டிற்கு அது இந்தியா - பாகிஸ்தான் தான். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால், இரு நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும். இந்த இரு அணிகளும் மீண்டும் ஒரு முறை 2023 ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் களம் காணவுள்ளன. இந்த போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2023-24 ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களின் அட்டவனையை ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். அதில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளன. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோதவுள்ளன.
இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இந்த போட்டித் தொடர் எங்கு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.2023ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது என கடந்தாண்டு ஜெய் ஷா கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.
இதையும் படிங்க: ‘ஐபிஎல்-யை விட உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது’ – கவுதம் காம்பீர்
இதனால், ஆசிய கோப்பை தொடரை இந்தியா புறக்கணிக்குமா அல்லது தொடர் வேறு நாட்டிற்கு மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலுக்கு மத்தியில் தான் இந்த அட்டவணையை ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார்.
எனவே, ஆசிய கோப்பை தொடரில் இரு நாடுகள் மோதிக்கொள்ள உள்ளன என்றாலும் அந்த போட்டி எங்கு நடைபெறும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் தலைதூக்கியுள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்லவே இல்லை. இந்தியா அணி பாகிஸ்தான் சென்று கடைசியாக விளையாடியது 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, BCCI, India vs Pakistan, Indian cricket team, Pakistan cricket