ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை சும்மா விடக்கூடாது- அக்தர் ஆவேசம்

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை சும்மா விடக்கூடாது- அக்தர் ஆவேசம்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

உலகக்கோப்பைதான் நம் வெறுப்பு அத்தனையும் உமிழ வேண்டிய இடம். இதைத்தான் பாகிஸ்தான் செய்ய வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆட்டம் தொடங்க டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து விட்டு ஓட்டம் பிடித்தது, இந்தப் புண்ணின் காயம் ஆறுவதற்குள் இங்கிலாந்தும் வரமாட்டோம் என்று கூறிவிட்டது, இந்த ரணங்களின் கோபத்தை டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் காட்ட வேண்டும் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

  டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 24ம் தேதி பாகிஸ்தான் மோதுகிறது, பிறகு 26ம் தேதி ஷார்ஜாவில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதுகிறது. நியூசிலாந்து வீரர்கள் பாக் தொடரிலிருந்து விலகி பத்திரமாக தனி விமானத்தில் நாடு திரும்பினர். இந்நிலையில் நியூசிலாந்து அணியை டி20 உலகக்கோப்பையில் போட்டு சாத்தி எடுக்க வேண்டும், வீழ்த்த வெண்டும் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் ஷோயப் அக்தர்.

  “முதலில் இந்தியாவுடன் ஆடுகிறோம், அடுத்த பெரிய போட்டி நியூசிலாந்துடன் அக்டோபர் 26ம் தேதி நடைபெறுகிறது. நம் கோபத்தை நியூசிலாந்து அணியிடம் ஆட்டத்தில் காட்ட வேண்டும். முதலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் அணித்தேர்வு கொள்கைகளில் தெளிவாக இருக்க வேண்டும். 3-4 வீரர்களைச் சேர்த்தால் அணி இன்னும் பலமாக இருக்கும்.

  உலகக்கோப்பைதான் நம் வெறுப்பு அத்தனையும் உமிழ வேண்டிய இடம். இதைத்தான் பாகிஸ்தான் செய்ய வேண்டும். அதற்கு குறிக்கோளுடன் கவனமாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான காலக்கட்டத்தை சந்திப்பதை எண்ணி வருந்த வேண்டியதில்லை” என்றார் ஷோயப் அக்தர். முன்னதாக அமெரிக்கா தங்கள் ராணுவ முகாமை பாகிஸ்தானில் அமைக்கக் கோரியதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததன் பலனை கிரிக்கெட்டில் அனுபவிப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Also Read: கிரிக்கெட்ல இனி ‘பேட்ஸ்மேன் இல்லை’- விதிகளில் மாற்றம்

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: ICC world cup, Pakistan cricket