அனல் பறக்கும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்!

2019 Indian Premier League Will Start Tomorrow | மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

Web Desk | news18
Updated: March 23, 2019, 6:18 PM IST
அனல் பறக்கும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்!
இதுவரை நடந்துள்ள 11 தொடர்களில்  சென்னை, மும்பை அணிகள் 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
Web Desk | news18
Updated: March 23, 2019, 6:18 PM IST
இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் நாளை தொடங்குகிறது.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

IPL opening ceremony,
ஐ.பி.எல் தொடக்க விழா. (IPL)


கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதலிரண்டு வாரங்களில் நடைபெறும் 17 லீக் போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 23 முதல் மே 5-ம் தேதி வரை நடைபெறும் ஒட்டுமொத்த லீக் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டது.

IPL Cup, ஐ.பி.எல்
ஐ.பி.எல் கோப்பை.


நடப்பு சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
Loading...
மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 14  போட்டிகளில் விளையாட உள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

IPL 2019 Captians
ஐ.பி.எல் கோப்பை உடன் கேப்டன்கள்.


ஐ.பி.எல் தொடர் கோலாகலமான தொடக்க விழா நடத்தப்பட்டு தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவதற்காக  ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

தமிழில் வெளியானது ‘Roar Of The Lion’.. சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

VIDEO: ரசிகர்களைப் பார்ப்பதற்காக தடுப்பையே தாண்டிய தல தோனி!

#CSKvRCB: கடந்த கால வரலாறு.. தோனியின் மஞ்சள் படையை சமாளிக்குமா கோலியின் படை?

ஆர்.சி.பி உடன் நாளை பலப்பரீட்சை... இறுதிக்கட்ட பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள்...!

#IPL2019: சி.எஸ்.கே.வுக்கு யோயோ டெஸ்ட் தேவையில்லை... பயிற்சியாளர் பிளெமிங் அதிரடி பேட்டி!

Also Watch...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...