ஆதாரமற்ற குற்றச்சாட்டு... முடிவுக்கு வந்தது 2011 உலகக் கோப்பை சூதாட்டப் புகார்..
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி
- News18 Tamil
- Last Updated: July 4, 2020, 1:00 PM IST
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக அப்போது அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சராக மஹிந்ததந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், 2011 உலகக் கோப்பை போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது தொடர்பான சில ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான் தொடர்பு படுத்தவில்லை. ஆனால் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்
இதையடுத்து இறுதி போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த முன்னாள் வீரர் அரவிந்த சில்வாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இறுதிப்போட்டியில் மெதுவாக விளையாடிய உபுல் தரங்கா, அனுபவ வீரர் ஜெயவர்தனே, கேப்டன் சங்கங்கார உள்ளிட்டோரிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. கேப்படன் சங்கங்காரவிடம் 10 மணி நேரமாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தினார்கள். கிரிக்கெட்டில் இலங்கைக்கு பல வெற்றிகளை பெற்று தந்த வீரர்களிடம் விசாரணை நடத்துவதா என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையின் முடிவில் இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமில்லை என்று கூறி இலங்கை போலீசார் வழக்கை கைவிட்டனர். இதையடுத்து நீண்ட நாட்களாக இருந்த சூதாட்ட சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், 2011 உலகக் கோப்பை போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது தொடர்பான சில ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான் தொடர்பு படுத்தவில்லை. ஆனால் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்
இதையடுத்து இறுதி போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த முன்னாள் வீரர் அரவிந்த சில்வாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.