• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Rahul Dravid | ‘வாங்க ஏதாவது படத்துக்குப் போவோம்’- 2007 உ.கோப்பை தோல்விக்குப் பிறகு தோனி, பதானை அழைத்த கேப்டன் திராவிட்

Rahul Dravid | ‘வாங்க ஏதாவது படத்துக்குப் போவோம்’- 2007 உ.கோப்பை தோல்விக்குப் பிறகு தோனி, பதானை அழைத்த கேப்டன் திராவிட்

கோச் கிரெக் சாப்பல்-கேப்டன் ராகுல் திராவிட், அருகில் சச்சின்.

கோச் கிரெக் சாப்பல்-கேப்டன் ராகுல் திராவிட், அருகில் சச்சின்.

2007-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம், இலங்கையிடம் தோல்வி அடைந்து இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதோடு சில நாட்களில்  திராவிட் தன் கேப்டன்சியையும் உதறினார்.

 • Share this:
  2007-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம், இலங்கையிடம் தோல்வி அடைந்து இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதோடு சில நாட்களில்  திராவிட் தன் கேப்டன்சியையும் உதறினார்.

  பயிற்சியாளர் கிரெக் சாப்பல் விலகினார், ஆனால் அவர் முன்னரே ‘பெரிய அழிவு காத்திருக்கிறது’ என்றார். சச்சின் டெண்டுல்கர் தன் ஓபனிங் ஸ்பாட்டிலிருந்து மாற்றப்பட்டதற்காக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விட்டேத்தியாக ஆடி ஒழித்தார். திராவிடுக்கு அப்போதைய இந்திய வீரர்கள் ஒத்துழைக்கவில்லை.

  Also Read: இந்திய அணியை முன்னேற்றியது கங்குலிதான், தோனிதான் என்பதை என்னால் ஏற்க முடியாது, திராவிட்தான் - சுரேஷ் ரெய்னா நெத்தியடி

  திராவிட் கேப்டன்சியில் 17 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி சேசிங்கில் வென்றது, ஆனால் உலகக்கோப்பையில் மண்ணைக் கவ்வியது மூத்த வீரர்களின் ஒத்துழைப்பு இன்மையினால்தான் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

  இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், ராகுல் திராவிடின் மனநிலை குறித்து அழகாகப் பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது அவர் கூறியதாவது:

  ராகுல் திராவிட் கொண்டு வந்தது என்னவெனில் தெளிவான கம்யூனிகேஷன் தான். இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும் இளம் வீரர்களிடம் அவர் தன் பாணியில் ஜாலியாகவே இருந்தார். யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் அவரிடம் போய் சுதந்திரமாக விவாதிக்கலாம்.

  Also Read: சுப்மன் கில்லுக்கு பதில் பிரிதிவி ஷா?- கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வாலை அவமானப்படுத்துவதா?- கபில் தேவ் விளாசல்

  2007 உலகக்கோப்பை தோல்வி சமயத்தில் ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்னிடமும் மகேந்திர சிங் தோனியிடமும் ராகுல் திராவிட் வந்தார். ‘இதோ பாருங்கள் நாம் அனைவருமே ஏமாற்றமாக இருக்கிறோம், ஏதாவது படத்துக்குப் போகலாம் வாங்க’ என்றார் திராவிட். படத்துக்குப் போனோம்.

  படம் முடிந்து சொன்னார், ‘நாம் உலகக்கோப்பையை இழந்து விட்டோம். பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த இங்கு வந்தோம், ஆனால் தோல்வியடைந்து விட்டோம். ஆனால் இதோடு உலகம் முடிந்து விடவில்லை. வாழ்க்கை இதைவிடப் பெரியது. நாம் நாளை மீண்டெழுவோம்’ என்றார் திராவிட்.

  எப்போதுமே ஒரு தன்னம்பிக்கை உணர்வை ஊட்டிக் கொண்டே இருப்பார் திராவிட். யாராவது பார்ம் அவுட் ஆனால் திராவிட் தான் அவருக்கு வழிகாட்டும் முதல் நபராக இருப்பார்.

  என்றார் இர்பான் பதான்.

  ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா, இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றால் நாம் தாதா, தோனி என்று ரெடிமேடாகச் சொல்கிறோம், ஆனால் திராவிட் தான் சிறந்த கேப்டன் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: