• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2 மாதத்தில் இரண்டு இரட்டை சதமடித்து அசத்திய ராகுல் டிராவிட் மகன் சமீத்..!

2 மாதத்தில் இரண்டு இரட்டை சதமடித்து அசத்திய ராகுல் டிராவிட் மகன் சமீத்..!

  • Share this:
    இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட். இவர் தற்போது இந்தியா ’ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.

    ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமீத். 14 வயதாகும் இவரும் கிரிக்கெட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது பள்ளி அளவிலான போட்டிகளில் ஆல்ரவுண்டராக ஜொலித்துவருகிறார். இவர் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்ப்டும் பி.டி.ஆர் ஷீல்டு போட்டிகளில் மல்லையா அதித்யா சார்பில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

    Also Read : ஷாஹித் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை..! - வைரல் புகைப்படம்


    கடந்த இரண்டு மாதத்தில் சமித் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். கடந்த டிசம்பரில் மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளிலும் இவர் பிரசிடெண்ட் அணி சார்பில் தார்வத் அணிக்கெதிரான போட்டியில் 201 ரன்கள் விளாசி இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: