Home /News /sports /

ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்: நியூசிலாந்து, இங்கிலாந்து மோசமான பேட்டிங்

ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்: நியூசிலாந்து, இங்கிலாந்து மோசமான பேட்டிங்

ஜேமிசன் அபார பவுலிங்

ஜேமிசன் அபார பவுலிங்

பிரெண்டன் மெக்கல்லம் கோச் ஆன பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறையில் மாற்றம் தெரியும் என்று பார்த்தால் பந்து வீச்சில் நன்றாக வீசி நியூசிலாந்தை லார்ட்ஸில் நேற்று 132 ரன்களுக்குச் சுருட்டிய இங்கிலாந்து பிறகு பேட்டிங்கில் சொதப்பி 116/7 என்று நாங்களும் நியூசிலாந்துக்கு சளைத்தவர்கள் அல்ல என்று ஆடி வருகின்றனர். முதல் நாள் முடிவில் பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 4 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...

    இங்கிலாந்துக்கு புதிதாக வந்திருக்கும் உயரமான வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும் ரிட்டையர் ஆகப்போகும் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட் செய்கிறார் என்றால் பிட்சில் ஒன்றும் பூதங்கள் இல்லை என்பது உறுதி. ஆனால் முதல் ஒரு மணி நேரத்துக்குள் 12/4 என்று ஆனது. பிறகு 45/7 என்று ஆனது. ஒரு கட்டத்தில் ஏதோ லீக் மேட்சைப் பார்ப்பது போல் இருந்தது, ஆனால் கொலின் டி கிராண்ட் ஹோம் (42), டிம் சவுதி (26) என்று கொஞ்சம் போராடி ஸ்கோரை 132 ரன்களுக்குக் கொண்டு வந்தனர்.

    இங்கிலாந்து சரிவு தனி ரகம். ஜாக் கிராலி, அலெக்ஸ் லீஸ் இணைந்து 59 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 92/2 என்ற நிலையிலிருந்து மாலை செஷனில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

    கேப்டன்சியை உதறிய பிறகு ஆடும் ஜோ ரூட் 11 ரன்களில் கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் கேட்ச் ஆனதையடுத்து 8 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் சவுதியிடம் காலியானார்.ஜானி பேர்ஸ்டோ ட்ரெண்ட் போல்ட் பந்தில் பிளேய்ட் ஆன் பவுல்டு ஆனார்.

    நியூசிலாந்து பேட்டிங்கில் டாப் 6-ல் 2 வீரர்கள்தான் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினர். கேன் வில்லியம்சன் 22 பந்தில் 2 ரன்கள் எடுத்து அறிமுக பவுலர் பாட்ஸின் அருமையான பந்துக்கு எட்ஜ் ஆனார். 45/7லிருந்து கடைசி 3 விக்கெட்டுகள் சேர்ந்து 87 ரன்களைச் சேர்த்ததாலும் இங்கிலாந்தை சரிவடையச் செய்ததாலும் நியூசிலாந்து கை ஓங்கியிருக்கிறது போல் தெரிகிறது.

    நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், சவுதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த போல்ட் 1 விக்கெட்டை வீழ்த்தினார். பிட்ச் சாதாரணமாகவே இருந்தது, ஆனால் இரு அணிகளும் பேட்டிங்கில் எந்த வித சரியான உத்தியும் திட்டமும் இல்லாமல் ஆடியதே சரிவுக்குக் காரணம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: England test, New Zealand

    அடுத்த செய்தி