முதல் டி20 போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி! - ஸ்ரேயாஸ் ஐயரின் போராட்டம் வீண்..

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி! - ஸ்ரேயாஸ் ஐயரின் போராட்டம் வீண்..

இந்திய அணி

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். 48 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.

  • Share this:
அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. தனி ஆளாக போராடிய ஸ்ரேயாஸ் ஐயரின் முயற்சிகள் வீணானது.

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கவில்லை. இரண்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளை குவித்த தெம்பில் களமிறங்கிய இந்திய அணியை ஆரம்பத்திலேயே அதிர வைத்தது இங்கிலாந்து. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் 4 ரன்களிலும், கே.எல்.ராகுல் ஒரு ரன்னிலும், கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆக இந்திய அணி பரிதாபத்திற்கு தள்ளப்பட்டது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். 48 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதுவே டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறந்த ரன் வேட்டையாகும். இதனையடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

125 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் குவித்து அடித்தளம் அமைத்தனர். 15.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 2வது போட்டி வரும் 14ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

 
Published by:Arun
First published: