• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தென் ஆப்பிரிக்கா 5 கேட்ச்களை விட்டாலும் தோற்றே தீருவோம் என்ற இலங்கை

தென் ஆப்பிரிக்கா 5 கேட்ச்களை விட்டாலும் தோற்றே தீருவோம் என்ற இலங்கை

முதல் டி20-யில் தென் ஆப்பிரிக்கா வெற்றி.

முதல் டி20-யில் தென் ஆப்பிரிக்கா வெற்றி.

இலங்கை அணி தனக்குத் தானே குழிதோண்டிக்கொண்டதில் சேசிங்கில் ஏகப்பட்ட டாட் பால்கள். ஸ்கோர் ஷீட்டில் புள்ளிவைத்து புள்ளி வைத்து ஸ்கோரர் கோலம் போடாததுதான் குறை. இதனால்

  • Share this:
    கொழும்புவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க 1-0 என்று முன்னிலை வகித்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் அறிமுக டி20 வீரரும் தென் ஆப்பிரிக்க கேப்டனுமான கேஷவ் மகராஜ். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க இலங்கை அணி 135/6 என்று முடங்கியது. தென் ஆப்பிரிக்க அணி 5 கேட்ச்களை கோட்டை விட்டது, தினேஷ் சந்திமால் டி20 கிரிக்கெட்டில் தன் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார், ஆனாலும் நாங்கள் தோற்றே தீருவோம் என்று பிடிவாதமாகத் தோற்றது இலங்கை.

    ஆக மந்தமான டி20 கிரிக்கெட்டுக்கு சாவுமணி அடிக்கும் பிட்சில் இலங்கை அணி தனக்குத் தானே குழிதோண்டிக்கொண்டதில் சேசிங்கில் ஏகப்பட்ட டாட் பால்கள். ஸ்கோர் ஷீட்டில் புள்ளிவைத்து புள்ளி வைத்து ஸ்கோரர் கோலம் போடாததுதான் குறை. இதனால் கடைசி 5 ஓவர்களில் 69 ரன்கள் தேவை என்ற நிலையில் 15வது ஓவருக்குப் பிறகு 17வது ஓவர் தொடங்குவதற்கு முன்பாக 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இலங்கை.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் குவிண்டன் டி காக் (32 பந்து 3 பவுண்டரி 1 சிக்ஸ் 36 ரன்), ரீசா ஹென்றிக்ஸ் (30 பந்து 38 ரன், 3 பவுண்டரி 1 சிக்ஸ்) என்று அசத்தி 73 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர். அதன் பிறகு ஒரு சரிவு, 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. பிறகு எய்டன் மார்க்ரம் (33 பந்து 48 ரன் 1 பவுண்டரி 2 சிக்ஸ்), டேவிட் மில்லர் (26 ரன் 15 பந்து, 2 பவுண்டரி 1 சிக்ஸ்) இணைந்து 35 பந்துகளில் 65 ரன்கள் சாத்தினர். இதனையடுத்து கடைசி 5 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் வர தென் ஆப்பிரிக்கா 163/5 என்று ஒரு டீசண்ட் டோட்டலை எடுத்தது.

    Also Read: 5-வது டெஸ்ட் ரத்து பின்னணியில் ஐபிஎல் 2021?
     Also Read: 5-வது டெஸ்ட் நிலவரம் என்ன?- கைவிடப்பட்டதா? இழக்கப்பட்டதா? ஒத்தி வைக்கப்பட்டதா?


    குவிண்டன் டீ காக்கிற்கு ஒரு எல்.பி. நாட் அவுட்டை ரிவியூ செய்து இலங்கை கேப்டன் ஷனகா ரிவியூவை இழந்தார், ஆனால் அடுத்து ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன யார்க்கரில் டி காக் கேட்ச் ஆனார், ஆனால் இதை ரிவியூ செய்யாமல் விட்டார் ஷனகா. அப்போது டீ காக் 4 ரன்களில் இருந்தார், அதன் பிறகு அவர் 36 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை இலக்கை துரத்திய போது கேப்டன் கேஷவ் மகராஜ் 1 விக்கெட்டுக்கு 19 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார். மேலும் இலங்கை சீரான இடைவெளிகளில் விக்கெட்டைப் பறிகொடுத்தது, அவிஷ்கா பெர்னாண்டோ 11 ரன்னில் ரன் அவுட் ஆனார். பனுகா ராஜபக்சவை மகராஜ் டக் அவுட் செய்தார்.

    சந்திமால் சிறப்பாக ஆடி தன் முந்தைய டி20 அதிகபட்ச ஸ்கோரான 58 ரன்களைக் கடந்து 66 ரன்கள் 54 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் இதில் அடங்கும். ஏகப்பட்ட டாட்பால்கள் இலங்கையைக் காலி செய்ய கடைசியில் கொத்தாக விக்கெட்டுகளை இழக்க 28 ரன்கள் குறைவாக எடுத்து  இலங்கை தோல்வி கண்டது, ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டார்.
    இதே மைதானத்தில் 2வது போட்டி நாளை, ஞாயிறன்று நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: