• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒரு சிக்ஸ்னாலும் சூப்பர்... 16 ஆண்டுகளுக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அதிரடி காட்டிய சச்சின்

ஒரு சிக்ஸ்னாலும் சூப்பர்... 16 ஆண்டுகளுக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அதிரடி காட்டிய சச்சின்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சிறப்பாக விளையாடிய சச்சின் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் சதம் அடிக்காமல் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    2003-ம் ஆண்டு மார்ச் 1 -ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 98 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றால் இரு நாட்டு ரசிகர்களுக்கும் அது போர் போன்றது தான். 2003-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி நடந்த போட்டியும் அது போலதான். 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.

    2003-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச போட்டி நடைபெற்றதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தானும், பாகிஸ்தானை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவும் தீவிரமாக இருந்தது. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 98 ரன்களை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்றே சொல்லலாம்.

    (photo : Getty images)


    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர் முடிவில் 273 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அன்வர் 101 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜகீர் கான் மற்றும் நெஹ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 274 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்களாக சேவாக் மற்றும் சச்சின் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் 3-வது பந்தில் 4 பவுண்ட்ரியையும், 2-வது ஓவர் 4-வது பந்தில் சிக்ஸரையும் அடித்து சிறப்பான தொடக்கத்தை தந்தார் சச்சின். சிறப்பாக விளையாடிய சச்சின் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் சதம் அடிக்காமல் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 45.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: