15 நாட்களில் 5 தங்கப் பதங்கள்... 19 வயது இளம் வீராங்கனை ஹீமா தாஸ் அசத்தல்

2020ம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு அவர் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 21, 2019, 5:07 PM IST
15 நாட்களில் 5 தங்கப் பதங்கள்... 19 வயது இளம் வீராங்கனை ஹீமா தாஸ் அசத்தல்
ஹீமா தாஸ்
Web Desk | news18
Updated: July 21, 2019, 5:07 PM IST
இந்திய தடங்கள வீராங்கனை ஹீமா தாஸ் 15 நாட்களுக்குள் 5 தங்கப் பதங்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.

போஜான் தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கடந்த ஜூலை 2-ம் தேதி 200 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் ஹீமா தாஸ். அதைத் தொடர்ந்து குட்னோ, கிளாட்னோ மற்றும் டபோர் நகரில் நடந்த தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்ற ஹீமா தாஸ், 200 மீட்டர் ஓட்டத்தில் 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.


ஹீமா தாஸின் இந்த தொடர் வெற்றிகள் மூலம் 2020-ம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு அவர் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்ச்சி பெற, 200 மீட்டர் ஓட்டத்தை 23.02 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தை 51.80 விநாடிகளிலும் கடக்க வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து சர்வதேச தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் என்ற பெருமையும் ஹீமா தாஸ் பெற்றுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஹீமா, தனது ஒரு மாத சம்பளத்தில் பாதியை வெள்ள நிவாரணத்துக்காக அளித்துள்ளார்.

200 மீ ஓட்டத்தில் ஹீமா தாஸ் வென்ற நான்கு தங்கப் பதக்கங்கள்

Loading...

ஜூலை 2 - 23.65 விநாடிகள் - போலந்து போஜான் தடகளம்
ஜூலை 7 - 23.97 விநாடிகள் - போலந்து புத்னோ தடகளம்
ஜூலை 13 - 23.43 விநாடிகள் - செக் குடியரசு க்ளாண்டோ தடகளம்
ஜூலை 17 - 23.25 விநாடிகள்- தாபோர் தடகளம்
400 மீட்டர் ஓட்டம்
ஜூலை 20 - 52.09 விநாடிகள் - நோவ் மெஸ்டோ நாட் மெட்டுஜி கிராண்டு
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...