ஒடிசா மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு..!

ஒடிசா மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு..!
கோப்பு படம்
  • Share this:
ஒடிசாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பன்னிரென்டாம் வகுப்பு மாணவன் சத்யஜித் விளையாடி உள்ளார். இந்த போட்டியின் போது ஒரு ரன் எடுக்க இவர் ஓடிய போது மைதானத்தில் சுருண்டு விழுந்து உள்ளார்.

சகவீரர்கள் இவரை உடனடியாக அருகிலிருந்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்.


Also Read : #INDvsNZ | ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்த்த நியூசிலாந்து..!

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் இளைஞர் ஹார்ட் அட்டாக் வந்ததால் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கூறி உள்ளனர். மேலும் இயற்கைக்கு மாறான மாரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரணத்தின் சரியான காரணத்தை அரிய உடல் கூறாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Also Read : INDvsNZ | 21 ஆண்டுகளுக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் டிராவிட் சாதனையை நிகழ்த்திய கே.எல்.ராகுல்..! தோனி கூட மிஸ்ஸிங்
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading