Home /News /sports /

Virat Kohli- 25 பந்துகளில் 16-கோலியின் ஸ்கோரை முன்னரே கணித்து ஷாக் கொடுத்த நபர்

Virat Kohli- 25 பந்துகளில் 16-கோலியின் ஸ்கோரை முன்னரே கணித்து ஷாக் கொடுத்த நபர்

கோலி ரன்னை துல்லியமாக கணித்த ட்விட்டர்வாசி

கோலி ரன்னை துல்லியமாக கணித்த ட்விட்டர்வாசி

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது பெரிய அளவில் அவரது மோசமான பார்மினால் பேசுபொருளாகியுள்ளார், நேற்று லார்ட்ஸில் ஸ்ரேயஸ் அய்யருக்கு பதில் ஆடிய விராட் கோலி 25 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மீண்டுமொருமுறை ஆஃப் ஸ்டம்ப் பந்தை விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து கேட்ச் ஆகி வெளியேறினார், இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இரவு 10 மணிக்கு விராட் கோலி இறங்கும் முன்பே 25 பந்துகளில் கோலி 16 என்று ட்வீட் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சரியாக கோலியும் 25 பந்துகளில் 16 ரன்களில் அவுட், இது எப்படி என்ற கேள்வியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அந்த ஷாக்கிங் ட்வீட் இதோ:



கோலியின் ஸ்கோரை சரியாகக் கணிப்பது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச்சி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியின் ஸ்கோர் எப்படி அவுட் ஆவார் என்பதை மிகச்சரியாக ரசிகர் ஒருவர் கணித்திருந்தார்.

ஒருமுறை இப்படி கோலியைன் ஸ்கோரை ஒருவர் சரியாகக் கணிக்க, விரேந்திர சேவாகே ஆச்சரியம் தாங்காமல் அந்த ட்வீட்டை பகிர்வு செய்ததும் நடந்துள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: India Vs England, Virat Kohli

அடுத்த செய்தி