6.6 அடி உயரம், 140 கிலோ எடை.. இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் 'கர்பீரியன் பாகுபலி'?

காரன்வால் உள்ளூர் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டுள்ளார்.

6.6 அடி உயரம், 140 கிலோ எடை.. இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் 'கர்பீரியன் பாகுபலி'?
ரஹீம் கார்ன்வால்
  • Share this:
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6.6 அடி உயரம், 140 கிலோ எடை கொண்ட வீரர் ரஹீம் கார்ன்வால் மேற்கிந்திய அணியில் தேர்வாகி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ரஹீம் காரன்வால் சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார். இதுவரை 55 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கார்ன்வால் 2,224 ரன்கள் எடுத்துள்ளார். 260 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

2017-ம் ஆண்டு இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. அப்போது மேற்கிந்திய தீவுகள் பயிற்சி அணியில் பங்கேற்றிருந்த கார்ன்வால், புஜாரா, கோலி, ரஹானே உள்ளிட்ட 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.


காரன்வால் உள்ளூர் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டுள்ளார். இதுவரை உடல்தகுதியை நிரூபிக்க முடியாமல் திணறி வந்துள்ளார். தற்போது உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கார்ன்வால் களமிறங்கினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அதிக உடல் எடை கொண்ட வீரர் என்ற பெருமையை பெறுவார்.
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்