அடேங்கப்பா..! 14 ஐ.பி.எல் சீசனில் வீரர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

14 ஐ.பி.எல் சீசனில் ஏலம் மூலம் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு ரூ.6,144 கோடி ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

14 ஐ.பி.எல் சீசனில் ஏலம் மூலம் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு ரூ.6,144 கோடி ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 • Share this:
  உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றாக ஐ.பி.எல் தொடர் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். அண்மையில், சென்னையில் 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் சென்னையில் நடைபெற்றது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர்.

  மொத்தம் 57 வீரர்கள் ஏலத்தில் தேர்தெடுக்கப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் மோரீஸ் இதுவரை இல்லாத அளவுக்கு 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. உலகின் மிகச்சிறந்த பேடஸ்மேன்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 2.2 கோடிக்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார்.

  மிகக் குறைவான விலைக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டதும், இதுவரை இல்லாத தொகைக்கு கிறிஸ் மோரீஸ் வாங்கப்பட்டதும் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனியார் ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்று 14 ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டியில் வீரர்களின் ஏலத்துக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த நாட்டு வீரர்கள் அதிக ஊதியத்தை பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, 14 ஐ.பி.எல் போட்டிகளில் வீரர்களின் ஏலத்துக்காக மட்டும் 6,144 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் அதிக ஊதியத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டியில் இருந்து தற்போது நடந்து முடிந்த மினி ஐ.பி.எல் ஏலம் வரை உள்நாடு மற்றும் வெளிநாடு என 789 வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  14 ஐ.பி.எல் தொடர்களில் நாடுகள் வாரியாக வீரர்கள் பெற்ற ஊதியம் :

  இந்தியா - ரூ.3,433 கோடி

  ஆஸ்திரேலியா - ரூ.905.9 கோடி (94 வீரர்கள்)

  தென் ஆப்பிரிக்கா - ரூ.539 கோடி (56 வீரர்கள்)

  வெஸ்ட் இண்டீஸ் - ரூ.458 கோடி (33 வீரர்கள்)

  இங்கிலாந்து - ரூ.285.96 கோடி (33 வீரர்கள்)

  நியூசிலாந்து - ரூ.211..6 கோடி ((31 வீரர்கள்)

  இலங்கை - ரூ.195.93 கோடி ((27 வீரர்கள்)

  ஆப்கானிஸ்தான் - ரூ.58.4 கோடி (4 வீரர்கள்)

  வங்கதேசம் - ரூ.34.78 கோடி (6 வீரர்கள்)

  பாகிஸ்தான் - ரூ.12.84 கோடி(11 வீரர்கள்)

  நெதர்லாந்து - ரூ.5.27 கோடி (2 வீரர்கள்)

  ஜிம்பாபே - ரூ.1 கோடி ( 3 வீரர்கள்)

  Published by:Vijay R
  First published: