Home /News /sports /

‘இன்வின்சிபிள்’ இந்தியா 14-0; உள்நாட்டில் புலி, இப்போது வெளிநாட்டிலும்தான்

‘இன்வின்சிபிள்’ இந்தியா 14-0; உள்நாட்டில் புலி, இப்போது வெளிநாட்டிலும்தான்

14-0 இந்திய அணியின் உள்நாட்டு தொடர் வெற்றிகள்.

14-0 இந்திய அணியின் உள்நாட்டு தொடர் வெற்றிகள்.

14 டெஸ்ட் தொடர்களை இந்தியாவில் வென்று 14-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது, ஆஸ்திரேலியா 10 உள்நாட்டுத் தொடர்களை வரிசையாக வென்று 2ம் இடத்தில் உள்ளது. ஜூலை 2004 முதல் 2008-வரையிலும் ஒருமுறை ஆஸ்திரேலியா தங்கள் நாட்டில் 10 தொடர்களை வென்றது.

மேலும் படிக்கவும் ...
    கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இந்தியாவில் தொடரை இழந்ததோடு சரி. அதன் பிறகு 14 தொடர்களை இந்திய அணி வென்று ‘வெல்ல முடியாத இந்திய அணி அதாவது இன்வின்சிபிள் இந்தியாவாகியுளது. 8 ஆண்டுகளில் இங்கே 2 டெஸ்ட் போட்டிகளில்தான் தோற்றது.

    நியூசிலாந்தை மும்பையில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக 14 தொடர்களை இந்தியாவில் வென்று சாதனை புரிந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக உள்நாட்டு ஜாம்பவான் அணியாக ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளுடன் உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் பழம்பெருமை பேசிக்கொண்டிருந்த ரவி சாஸ்திரி-கோலி கூட்டணியினால் இந்தியா தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்திடம் கோட்டை விட்டது. அதற்கு பதிலடியாக இந்தியாவில் இப்போது தொடரை வென்றுள்ளது.

    ஆனாலும் இந்த நியூசிலாந்து அணி சாதாரண அணியல்ல, குழிப்பிட்சை போடாததால் அவர்களுக்கும் சில செஷன்களில் வாய்ப்பு இருந்தது, இங்கிலாந்தை குழிப்பிட்சை போட்டு காலி செய்தது போல் நியூசிலாந்தை செய்யவில்லை என்பது புதிய தொடக்கம்தான்.

    14 டெஸ்ட் தொடர்களை இந்தியாவில் வென்று 14-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது, ஆஸ்திரேலியா 10 உள்நாட்டுத் தொடர்களை வரிசையாக வென்று 2ம் இடத்தில் உள்ளது. ஜூலை 2004 முதல் 2008-வரையிலும் ஒருமுறை ஆஸ்திரேலியா தங்கள் நாட்டில் 10 தொடர்களை வென்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி மார்ச் 76-பிப்ரவரி 86 வரை 8 டெஸ்ட் தொடர்களை தங்கள் சொந்த மண்ணில் வென்றுள்ளது, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்ச்சியாக தங்கள் சொந்த மண்ணி 7 தொடர்களை வென்றுள்ளது. 2012-13 உள்நாட்டுத் தொடரில் இங்கிலாந்திடம் இந்தியா 2-1 என்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது.

    Also read: மும்பை டெஸ்ட் ஒருதலைபட்சமாக முடிந்து விட்டது : ராகுல் திராவிட் வருத்தம்
     இந்திய அணி இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குச் சென்று அங்கும் கொடி நாட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருவதால் அங்கு பிட்ச் என்னதான் மோசமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs Australia, India Vs England, India vs New Zealand

    அடுத்த செய்தி