VIDEO: 3 பந்துகளில் 10 ரன்களா? 2 சிக்சர்களை பறக்கவிட்டு சேலஞ்சை முடித்த க்ருனல் பாண்டியா!

சிக்சரை பறக்கவிட்ட க்ருனல் பாண்டியா. (Video Grab)

#MumbaiIndians all-rounder #KrunalPandya did interesting batting challenge | மும்பை அணியில், ரோகித் சர்மா, பாண்டியா சகோதரர்கள், பும்ரா என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐபிஎல் தொடரை முன்னிட்டு நடந்த பயிற்சி ஆட்டத்தில் 3 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டிய நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் க்ருனல் பாண்டியா 2 சிக்சர்களை பறக்கவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

    ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கெத்தாக இருக்கின்றன. இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.

    CSK, MI, சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸ்
    சி.எஸ்.கே - மும்பை இந்தியன்ஸ்.


    மும்பை அணியில், ரோகித் சர்மா, பாண்டியா சகோதரர்கள், பும்ரா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மும்பை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போட்டியின் கடைசிக் கட்டத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், அழுத்தத்தை சரியாக கையாள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், க்ருனல் பாண்டியாவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

    க்ருனல் பாண்டியா, Krunal Pandya
    க்ருனல் பாண்டியா. (ICC)


    3 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில் க்ருனல் பாண்டியா முதல் பந்தை வீணடித்தார். 2-வது மற்றும் 3-வது பந்துகளில் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.



    இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னையில் ஐபிஎல்: நாளை முதல் டிக்கெட் விற்பனை!

    VIDEO: நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு.. உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்.. தொடர் ரத்து!

    #IPL2019: தோனியா? கோலியா? 23-ம் தேதி தெரிந்துவிடும்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published: