Cristiano Ronaldo: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கோகோ கோலா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

Cristiano ronaldo

ரொனால்டோவின் வீடியோ வைரலானதை தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அளவுக்கு அதாவது 1.6% சரிவை சந்தித்துள்ளது.

  • Share this:
பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பத்ரிகையாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டில்களை தள்ளி வைத்து விட்டு தண்ணீர் குடிக்குமாறு கூறிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து கோகோ கோலா நிறுவனத்துக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராக திகழும் கிறிஸ்டியனோ ரொனால்டோ (வயது 36), நடைபெற்று வரும் UEFA EURO 2020 தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். குரூப் F பிரிவில் ஹங்கேரி அணிக்கெதிரான ஆட்டத்துக்கு முன்னதாக வழக்கமான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்திப்பதற்காக மேடையில் அமர்ந்தார், அப்போது அவரின் எதிரில் மேஜை மீது இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்து கடுப்பான ரொனால்டோ, கோலா பாட்டில்கள் இரண்டையும் அப்புறப்படுத்தி விட்டு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை மேலே உயர்த்திக் காட்டினார்.

‘அகுவா’ என தண்ணீருக்கான போர்த்துகீசிய வார்த்தையையும் அவர் கூறி கோலா மீதான தன்னுடைய வெறுப்பைக் காட்டி எல்லோரும் கோலாவுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டுமென சமிக்ஞை செய்தார் ரொனால்டோ.



ரொனால்டோவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் வைரலானது. கோடிக்கணக்கானவர்கள் ரொனால்டோவின் இந்த வீடியோவை பகிர்ந்தனர்.

Also Read:   ‘மருத்துவ கட்டிப்பிடித்தல்’ தொழிலின் அனுபவங்களை பகிர்ந்த ஆச்சரியப் பெண்மணி: ஒரு மணி நேரத்திற்கு ரூ.7300 வசூலிக்கிறாராம்!

இதன் காரணமாக தற்போது கோகோ கோலாவின் பங்குகள் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. கோகோ கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அளவுக்கு அதாவது 1.6% சரிவை சந்தித்துள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் 30,000 கோடி ரூபாய்) இதனையடுத்து 242 பில்லியனாக இருந்த கோகோ கோலாவின் மொத்த பங்கு மதிப்பு, 238 பில்லியனாக சரிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடருக்கான ஸ்பான்சர்களுள் ஒன்றான கோகோ கோலா, கிறிஸ்டியனோ ரோனால்டோவின் செயலுக்காக இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: