ரோபோவுடன் விளையாடும் சத்யன்... பொம்மையுடன் சண்டையிடும் பவானிதேவி... ஊரடங்கில் வீரர்களின் பயிற்சி அலசல்

ஜெர்மனியிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட ரோபோ தான் சத்யனின் தற்போதைய பயிற்சியாளர்.

ரோபோவுடன் விளையாடும் சத்யன்... பொம்மையுடன் சண்டையிடும் பவானிதேவி... ஊரடங்கில் வீரர்களின் பயிற்சி அலசல்
டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளிலேயே கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உலகில் அனைவரும் அச்சத்தால் உறைந்து போயுள்ளனர். எந்த நேரமும் பிசியாகவே இருக்கும் மைதானங்கள் வீரர்களின் கால் தடமின்றி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. உள்ளூர் விளையாட்டு போட்டிகள் ரத்து, ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைப்பு என ஊரடங்கால்  விளையாட்டு உலகமும் கட்டிப்போடப்பட்டுள்ளது.டோக்கியோவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. விளையாட்டை நேசிக்கும் வீரர்களின் ஒலிம்பிக் பதக்க கனவையும் காக்க வைத்தது இந்த கொரோனா வைரஸ். தமிழகத்திலிருந்து ஒலிம்பிக்கில் பதக்க கனவை சுமந்துள்ள நட்சத்திரங்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என ஆய்வு செய்தது நியூஸ் 18 தமிழ்நாடு.

டேபிள் டென்னிசில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நம்பிக்கைக்குரிய வீரரான அர்ஜூனா விருது வென்ற சத்யன் ஞானசேகரனை முதலில் சந்தித்தோம். தனது இல்லத்தில் அதிநவீன ரோபோ தொழில்நுட்பம் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் சத்யன்.

தமிழக விளையாட்டு துறை அனுமதியுடன் ஜெர்மனியிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட ரோபோ தான் சத்யனின் தற்போதைய பயிற்சியாளர். நிமிடத்திற்கு 120 பந்துகளை கண் இமைக்கும் நேரத்தில் வீசி எறிந்து சத்யனை தயார்படுத்துகிறான் இந்த ரோபோ வீரன். ரோபோவின் ஸ்பீடுக்கு சற்றும் சளைக்காமல் ரிவெஞ்சுகளை தெறிக்க விடுகிறார் சத்யன்.இதே போல் சர்வதேச வாள்சண்டை போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழகத்தின் வீர மங்கை பவானி தேவியும், தனது வீட்டு மொட்டை மாடியை பயிற்சிக்களமாக மாற்றியுள்ளார். எதிரிகளை தனது வாள் மூலம் பயமுறித்தி வந்த பவானிதேவி தனது பயிற்சி உபகரணங்களை எதிரிபோல் வடிவமைத்து அதனுடன் சண்டையிட்டு வருகிறார்.

கொரோனோவிலிருந்து மக்களை பாதுகாக ஓய்வின்றி உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியார்கள் என அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக வீரர்கள் தங்கள் வீட்டிலேயே தீவிர பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் பதக்கத்தை பரிசளிக்க காத்திருக்கின்றனர்.First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading