முகப்பு /செய்தி /விளையாட்டு / செஸ் ஒலிம்பியாட் அரங்கில் செஸ் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

செஸ் ஒலிம்பியாட் அரங்கில் செஸ் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

செஸ் விளையாடும் முதல்வர் ஸ்டாலின்.

செஸ் விளையாடும் முதல்வர் ஸ்டாலின்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக 700 போர்டுகளில் ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய அளவிலான பிரமாண்ட அரங்கம் ஏற்பாடாகியிருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அகில இந்தியா செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளைத் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு கடந்த 4 மாதங்களாக அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் சேர்ந்து செய்து வருகிறது.

உலகிலேயே மிகப் பெரிய செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெற இருந்தது, உக்ரைன் ரஷ்யா போரால் அது தடைப்பட, இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதை நடத்தும் வாய்ப்பை மாநில அரசுகளில் தமிழகம் பெற்றது.

செஸ் விளையாடி மகிழும் முதல்வர் ஸ்டாலின்.

செஸ் ஒலிம்பியாட்டுக்கான ‘தம்பி’ சின்னம் அறிமுகத்திலிருந்து இந்தியா முழுவதும் செஸ் ஒலிம்பியாட்டைக் கொண்டு சேர்க்கப் பல விளம்பர யுக்திகளையும் தமிழக அரசு கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் செஸ் ஒலிம்பியாட் பாடலும் வெளியிடப்பட்டது. அந்த பாடலை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

அந்த பாடல் காட்சிகளிலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தோன்றினார். 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை நோக்கி வருவதால் சென்னையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

செஸ் விளையாடி மகிழும் முதல்வர் ஸ்டாலின். அருகில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் இடத்தைப் பார்வையிடச் சென்ற முதலமைச்சர் அங்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Chess, Chess Olympiad 2022