• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தங்க மங்கை கோமதிக்கு முதலமைச்சர் வாழ்த்து!!

தங்க மங்கை கோமதிக்கு முதலமைச்சர் வாழ்த்து!!

கோமதி

கோமதி

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, பல வெற்றிகள் பெற்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என வாழ்த்து

  • Last Updated :
  • Share this:
ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்.

இவருக்கு நாடு முழுவதிலும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோமதிக்கு தன் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, பல வெற்றிகள் பெற்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Read Also: மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி.. கண்கலங்க வைக்கும் பின்னணி!

Watch Also:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: