ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசியப் போட்டிகள்: தென் கொரியா-சீனா நீச்சல் வீராங்கனைகளுக்கு இடையே அடிதடி!

ஆசியப் போட்டிகள்: தென் கொரியா-சீனா நீச்சல் வீராங்கனைகளுக்கு இடையே அடிதடி!

சீனவின்  ஷென் மற்றும் கொரியாவின் கிம்

சீனவின் ஷென் மற்றும் கொரியாவின் கிம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுள்ள சீனாவின் நீச்சல் வீராங்கனை டியோ ஷென், தன்னை தாக்கியதாக தென் கொரியாவின் கிம் ஹியூ ஜின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பயிற்சியின் போது  தென் கொரியாவின் கிம் ஹியூ ஜின்னின் கால் பின்னால் நீந்திக் கொண்டிருந்த சீனாவின் டியோ ஷென்னின் முகத்தில் பட்டிருக்கிறது. தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு கிம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ஆனால் அதன்  பின்னர், கிம்மை தொடர்ந்து வந்த ஷென், அவரை கீழே தள்ளி வயிற்றில் இரண்டு தடவைகள் மிதித்தார் என ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கிம் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென, தென்கொரியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் நீச்சல் வீராங்கனையான ஷென் 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Asian Games 2018