நடப்பாண்டில் இரண்டாவது முறையாக உலக சாம்பியனை வீழ்த்தியிருக்கிறார் 16 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா.
செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் தொடரின் ஐந்தாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி மீண்டும் சாதனை நிகழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
சதுரங்க சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது தொடரான செசபிள் மாஸ்டர்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
40 வது நகர்த்தலின் போது கார்ல்சன் தவறுதலாக குதிரையை நகர்த்தியதால் பிரக்ஞானந்திடம் சரணடைந்தார் கார்ல்சன். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விளையாடிய பிரக்ஞானந்தா, 41-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.