Home /News /sports /

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வெல்லும் ரேஸில் இந்தியா!

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வெல்லும் ரேஸில் இந்தியா!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு ஓபன் பிரிவில் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்த மூன்று அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10 ம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய  நிலவரப்படி புள்ளி விவரங்களையும் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பையும் பார்க்கலாம்.

    அனைத்து நாடுகளும் ஓபன் மற்றும் பெண்களின் பிரிவில் ஒரு அணியை கொண்டுள்ள போதும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதால், இந்தியாவிற்கு இந்த ஒலிம்பியாடில் மூன்று அணிகள் பங்கு பெரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    9ஆவது சுற்று முடிந்த நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி, ஓபன் பிரிவில் இந்தியா பி அணி, இரண்டாவது இடத்திலும், இந்தியா ஏ அணி நான்காவது இடத்திலும், இந்தியா சி அணி இருபத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா பி அணி பத்தாவது இடத்திலும், இந்தியா சி அணி பதினாறாவது இடத்திலும் உள்ளது.

    இன்று நடக்கும் 10ஆவது சுற்றில், ஓபன் பிரிவில்,

    இந்தியா ஏ - ஈரான் உடனும்,

    இந்தியா பி - உஸ்பெகிஸ்தான் உடனும்,

    இந்தியா சி - ஸ்லோவேக்கியா உடனும் பலபரிட்சை நடத்துகிறது.

    மேலும் மகளிர் பிரிவில்,

    இந்தியா ஏ - கஜகஸ்தான் உடனும்,

    இந்தியா பி - நெதர்லாந்து உடனும்,

    இந்தியா சி - ஸ்வீடன் உடனும் பலபரிட்சை நடத்துகிறது.

    செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு ஓபன் பிரிவில் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்த மூன்று அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

    ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியில் மேக்னஸ் கார்ல்சனை வென்ற ஹரி கிருஷ்ணாவும், இந்திய பி அணியில் இதுவரை தோல்வியை தழுவாத குகேஷ் போன்றோர் உள்ளதால் இந்த இரு அணிகளும் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி போலந்திற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் முதல் இடத்திலும், இந்தியா பி இரண்டாவது இடத்திலும், ஆர்மீனியா மூன்றாவது இடத்திலும், இந்தியா ஏ நான்காவது இடத்திலும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

    மகளிர் பிரிவில், போலந்து  முதல் இடத்திலும், இந்திய ஏ இரண்டாவது இடத்திலும், ஆர்மீனியா மூன்றாவது இடத்திலும், ஜார்ஜியா நான்காவது இடத்திலும், உக்ரைன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

    அமெரிக்கா இந்த போட்டியில், ஓபன் பிரிவில் 9ஆவது இடத்திலும் மகளிர் பிரிவில் 13வது இடத்திலும் உள்ளது.

    இன்றைய போட்டியில் இந்த மூன்று அணிகளுமே வெற்றியை பதிவு செய்தால் தங்கப்பதக்கத்திற்கான ரேசில் இருப்பார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Chess Olympiad 2022, Gold for india

    அடுத்த செய்தி