டி.என்.பி.எல் இறுதிப் போட்டி! திண்டுக்கல்லை வீழ்த்தியது சேப்பாக்கம் கில்லீஸ்

ஹரி 4 ரன்களிலும், ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். சதுர்வேதும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

டி.என்.பி.எல் இறுதிப் போட்டி! திண்டுக்கல்லை வீழ்த்தியது சேப்பாக்கம் கில்லீஸ்
சேப்பாக்கம் அணி
  • News18
  • Last Updated: August 15, 2019, 11:18 PM IST
  • Share this:
டி.என்.பி.எல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரானப் போட்டியில் சேப்பாக்கம் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நடப்பு டி.என்.பி.எல் தொடரில் இந்த இரு அணிகளும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. லீக் போட்டியில் திண்டுக்கல் அணியும், குவாலிபையர் போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றது.

இன்றைய இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய திண்டுக்கல் அணியின் சார்பில் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.


ஹரி 4 ரன்களிலும், ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். சதுர்வேதும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுமந்த ஜெய்ன் மட்டும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். மோகன் அபினவ், 21 ரன்கள் எடுத்து அணியின் ரன் அதிகரிக்க உதவினார்.

மறுபுறம் நிதானமாக ஆடிய சுமந்த் ஜெயின் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். விவேக் 23 ரன்கள் எடுத்தார். இறுதியில், திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also see:
First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்