'சென்னையின் எஃப்.சி' தலைமை பயிற்சியாளராக சபா லஸாலோ நியமனம்

2020-21 ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எஃப்.சி. தலைமை பயிற்சியாளராக ஹங்கேரியை சேர்ந்த சபா லஸாலோ (Csaba László) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

'சென்னையின் எஃப்.சி' தலைமை பயிற்சியாளராக சபா லஸாலோ நியமனம்
சபா லஸாலோ
  • News18
  • Last Updated: August 31, 2020, 12:12 PM IST
  • Share this:
56 வயது சபா முதன்முறையாக ஆசியாவில் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையின் எஃப்.சி உருவாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் லஸாலோ பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு தேசிய அணிகள் உள்பட எட்டு நாடுகளில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் நிறைந்த லஸாலோ. வியூகங்கள் வகுப்பதில் பெயர்பெற்றவராக திகழ்கிறார்.

சென்னையின் எஃப்சி அணியில் 11 இந்திய வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதோடு, பிரேசிலைச் சேர்ந்த டிஃபண்டர் எலி சபியா மற்றும் கிரியேட்டிவ் மிட்ஃபீல்டர் ரஃபேல் கிரிவிலாரோவும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.


Also read... முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் - இந்தியா, ரஷ்யாவிற்கு சாம்பியன் பட்டம்

ருமேனியா, ஹங்கேரி, அதற்கு முன் மேற்கு ஜெர்மனியில் உள்ள பல கிளப்களில் சென்ட்ரல் மிட்ஃபீல்டராக விளையாடிய லஸாலோ, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தன் 27-வது வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

ஹங்கேரியில் உள்ள பெரிய கிளப்பான ஃபெரன்கவராஸ் (Ferencváros) கிளப்பில் 2005-ம் ஆண்டு பணியாற்றியபோது, சிறந்த ஹங்கேரி பயிற்சியாளருக்கான விருது வென்றார் லஸாலோ. பின், உகண்டா தேசிய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.அவரது தலைமையில்தான் உகண்டா, FIFA தரவரிசையில் 167-வது இடத்தில் இருந்து 97-வது இடத்துக்கு முன்னேறியது. அதோடு, அவரது வழிநடத்துதலின் கீழ்தான், 24 ஆண்டுகளில் முதன்முறையாக உகண்டா, ஆஃப்ரிக்கா கோப்பை தொடருக்கு முன்னேறியது. பின் அவர், லிதுவேனியா நாட்டின் தலைமை பயிற்சியாளராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

சென்னையின் எஃப்.சி.யின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் உணர்கிறேன். கிளப் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நாளில், இந்தக் கிளப் உடன் இணைவதை பெருமையாகக் கருதுகிறேன்.

சென்னையின் எஃப்.சி கிளப் ஒரு குடும்பம் போன்றது. திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துவிடும் கிளப் இது. எது நடந்தாலும் ஆதரவு தரும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்தக் குடும்பத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சக கோச்சிங் ஸ்டாஃப்களுடன் இணைந்து, சென்னையின் எஃப்.சி கிளப் பெரும் சாதனைகளைப் படைக்க முயற்சிப்போம்’’ என்றார் லஸாலோ.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading