ட்விட்டரில் 6 மில்லியன் ரசிகர்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. மகிழ்ச்சியில் வீரர்கள்..

ட்விட்டரில் 6 மில்லியன் ரசிகர்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. மகிழ்ச்சியில் வீரர்கள்..

தோனி

சிஎஸ்கே அணி கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான சமீபத்திய போட்டிகள் உட்பட இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய பிரீமியர் லீக்கில் மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் ஆறு மில்லியன் பின்தொடர்பவர்களை நிறைவு செய்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கேப்டன் கூல் என்றழைக்கப்படும் தோனி அவர்கள், தனது விரல்களால் ஆறு என்று காட்டிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்துடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்களின் '6 மில்லியன் அன்பிற்கு' தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோ ட்விட்டரில் மட்டும் இதுவரை ஏழு லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது. “சென்னை சூப்பர் #சிக்ஸர்ஆன்ட்விட்டர்! கடந்த தசாப்தத்தில் ஒவ்வொரு பூச்செண்டு மற்றும் அனைத்து சூப்பர் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய நன்றி, அனைத்து #மஞ்சள் நிறமும் உங்களுக்கு # விசில்போடு" என்று அந்த வீடியோவில் தலைப்பிட்டுள்ளன.

மேலும், ரசிகர்களும் கருத்துகள் பிரிவில் எதிர்பார்த்தபடியே தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு நபர், “எனது அன்பான சிஎஸ்கே குழுவினர் 6 மில்லியன் ரசிகர் பட்டாளத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.. என்ன ஒரு மறுபிரவேசம் #csk. ஐபிஎல்-இல் 100 கேட்சுகளை விக்கெட் டேக்கராக வெற்றிகரமாக முடித்த எம்.எஸ். தோனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாம் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம், ஆனால் சாம்பியன்கள் எப்போதும் சாம்பியன்கள் தான். கீப் இட் அப் #சி.எஸ்.கே" என்று தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.Also read... பந்துவீச்சில் மிரட்டிய டெல்லி அணி: 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி படுதோல்வி

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் உள்ள ஏராளமான ரசிகர்கள் டி20 ஐபிஎல்லை பார்த்து வருகின்றனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸின் செயல்திறனை பொருத்தவரை, ஐபிஎல் அட்டவணையில் தற்போது 6வது இடத்தில் உள்ளது மற்றும் ஐந்து போட்டிகளில் நான்கு புள்ளிகளைப் பெற முடிந்தது.

இப்போது வரை, சிஎஸ்கே அணி கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான சமீபத்திய போட்டிகள் உட்பட இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. அதில், அக்டோபர் 4ம் தேதியன்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட மொத்தம் எட்டு அணிகள் இந்தாண்டு லீக்கின் ஒரு பகுதியாகும். தற்போது, ​​முதலிடத்தில் டெல்லி அணியும், கடைசி இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: