ராஜஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்திய சி.எஸ்.கே.. ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்!

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: April 1, 2019, 11:32 AM IST
ராஜஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்திய சி.எஸ்.கே.. ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்!
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
news18
Updated: April 1, 2019, 11:32 AM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 39 ரன்கள் எடுத்தார். ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐந்தாவதாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர், இறுதி ஓவரில் ப்ராவோ வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மீதமுள்ள ஐந்து பந்துகளில் 12 எடுக்கவேண்டிய நிலையிருந்தது. ஜோஃப்ரா ஆர்கெர் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் களத்தில் நின்றனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து, சென்னை அணி போட்டியிட்ட 3 போட்டிகளும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Also watch

Loading...
POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...