• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேசிய விளையாட்டு விருது விழா

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேசிய விளையாட்டு விருது விழா

விளையாட்டுத்துறை விருது விழா

விளையாட்டுத்துறை விருது விழா

வீடியோ கான்பரன்ஸில் முதல் முறையாக தேசிய விளையாட்டு விருது விழா நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் தேசிய விளையாட்டு விருதுகள் கொரோனா வைரஸ் அச்சத்தால், நடப்பாண்டு ஆன்லைனில் அறிவிக்கப்படும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விளையாட்டுத்துறையில் அந்த ஆண்டு சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான் சந்த் விருது போன்ற விருதுகள் குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு கொரோனா வைரஸ் அச்சத்தால், ஒட்டுமொத்த உலகமும் முடங்கிய சூழலில், விளையாட்டு உலகமும் முடங்கியது. இந்த நிலையில், நடப்பாண்டு தேசிய விருது பெறும்  வீரர்கள் ஆன்லைன் மூலம் கவுரவிக்கப்படவுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Also read... நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் கொரோனோ தொடர் கண்காணிப்பு மையம் - என்னென்ன வசதிகள்...?

இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் வெளியான தகவலில், முதல் முறையாக தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது. கொரோனா அச்சத்தால் மத்திய அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



விருது பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாக்ஸிங் வீரர் தேவராஜ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், ஹாக்கி வீரர் சர்தார் சிங் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய தேர்வுக்குழு விருதுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளது. வீரர்கள் பட்டியல் விருது வழங்கும் விழா தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி காலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: