கேத்தி கெல்லி WWE-ஐ விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!

கேத்தி கெல்லி WWE-ஐ விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!
கேத்தி கெல்லி WWE-ஐ விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!
  • Share this:
கேத்தி கெல்லி அமெரிக்க தொலைக்காட்சியின் தொகுப்பாளர். இவர் 2016-ம் ஆண்டு WWE -ல் தொகுப்பாளராக சேர்ந்தார். 4 ஆண்டுகளாக WWE-யுடன் பயணித்த அவரது பயணம் நிறைவு பெற்றுள்ளதாக கேத்தி கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், கடந்த சில நாட்களாக நான் சுமார் 20 முறையாவது இதனை பதிவிட்டு நீக்கியுள்ளேன். என்ன எழுதுவது என்று இன்னும் தெரியவில்லை… WWE ஐ விட்டு வெளியேறுவதற்கான முடிவுக்கு நான் வந்துள்ளேன். நான் எனது வேலையை எவ்வளவு நேசித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். இந்த முடிவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

WWE - டிஜிட்டல் குழுவுக்கு நன்றி. ஒவ்வொரு வகையிலும் ஒரு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்ததற்கு ஸ்டெப்னி மெக்மஹோனுக்கு நன்றி. தொலைக்காட்சியில் சிறந்த மல்யுத்த நிகழ்ச்சியைத் தலைமை தாங்கியதற்கும், அதன் ஒரு பகுதியாக என்னை அனுமதித்ததற்கும் டிரிபிள் எச்-க்கு நன்றி.


நான் செய்த வீடியோவைப் பார்த்த எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அனைத்தையும் வார்த்தைகளால் கூறி விட முடியாது. எனது அடுத்த அத்தியாயம் என்னை எங்கு அழைத்துச் செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் உறுதியளிக்கிறேன் இது எனது இறுதி பயணம் கிடையாது. நான் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

 கேத்தியின் இந்த முடிவு ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்