வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுகராவை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் நட்சத்திர வீராங்கனைகளுக்கான ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பங்கேற்று விளையாடினார்.
தொடரின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சிந்து, குரூப் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறினார். லீக் சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சி, நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைப்பேவின் தாய் ஸூ யிங் ஆகியோர் வீழ்த்தினார் சிந்து.
அரையிறுதியில், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சிந்து நுழைந்தார். இன்று (16.12.18) நடந்த இறுதிப்போட்டியில், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நசோமி ஒகுகரா உடன் பலப்பரீட்சை நடத்தினார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-19, 21-17 என நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
Astonishing. Simply astonishing rally #badminton #HSBCBWFbadminton #HSBCBWFGuangzhouFinals #HSBCBWFWorldTourFinals pic.twitter.com/7WFw8CPRzO
— BWF (@bwfmedia) December 16, 2018
வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் பி.வி. சிந்து படைத்தார். 7 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருந்த சிந்து, தனது விடாமுயற்சியால் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை உச்சிமுகர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PV Sindhu