Home /News /sports /

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் வெற்றி, மாளவிகா தோல்வி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் வெற்றி, மாளவிகா தோல்வி

கிடாம்பி ஸ்ரீகாந்த்

கிடாம்பி ஸ்ரீகாந்த்

கிடாம்பி ஸ்ரீகாந்த், திங்கள்கிழமை நடந்த BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அயர்லாந்தின் நாட் நுயெனை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Inter, IndiaTokyoTokyo
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், திங்கள்கிழமை நடந்த BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அயர்லாந்தின் நாட் நுயெனை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.பிரணாய் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் லூகா ரேபரை தோற்கடித்தார், மாளவிகா பன்சோத் தனது தொடக்கச் சுற்றில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சனிடம் 21-11, 21-18 என்ற நேர் கேம்களில் தோல்வியடைந்தார்.

முன்னதாக, 35 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் டென்மார்க்கின் 21-12, 21-11 என்ற செட் கணக்கில், ஹான்ஸ்-கிறிஸ்டியன் சோல்பெர்க் விட்டிங்கஸை சிறப்பாக வீழ்த்தி, லக்ஷ்ய சென் வெற்றியைத் தொடங்கினார், ஆனால் பி சாய் பிரனீத்  ஒரு மணி நேரத்தில் 21-15, 15-21, 15-21 என்ற செட்  கணக்கில் தோல்வியடைந்தார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் என் சிக்கி ரெட்டி ஜோடி, 21-7, 21-9 என்ற நேர் கேம்களில் மாலத்தீவு ஜோடியான பாத்திமத் நபாஹா அப்துல் ரசாக் மற்றும் அமினாத் நபீஹா அப்துல் ரசாக் ஜோடியை வீழ்த்தியது.

Also Read: ஆசிய வாலிபால் போட்டி: இந்தியா வெண்கலம் வென்றதோடு யு-19 உலகக்கோப்பைக்கு தகுதி

ஆடவர் இரட்டையர் பிரிவில் எம்.ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஜோடி 21-17,17-21, 22-20 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுபக் ஜோம்கோ மற்றும் கிட்டினுபோங் கெட்ரென் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இஷான் பட்நாகர், தனிஷா க்ராஸ்டோ ஜோடி 21-12, 21-13 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பேட்ரிக் ஷீல்-பிரான்சிஸ்கா வோல்க்மேன் ஜோடியை வீழ்த்தி முன்னேறியது. எனினும் மனு அட்ரி மற்றும் பி சுமீத் ரெட்டி ஜோடி 11-21, 21-19,15-21 என்ற கணக்கில் ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா மற்றும் மசாயுகி ஒனோடெரா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Badminton, Sports Player, World Badminton Championship

அடுத்த செய்தி