Home /News /sports /

குத்துச்சண்டை: தண்ணீர் பாட்டிலை ஏறிந்த பயிற்சியாளர் இடைநீக்கம்

குத்துச்சண்டை: தண்ணீர் பாட்டிலை ஏறிந்த பயிற்சியாளர் இடைநீக்கம்

பல்கேரியா வீராங்கனைக்கு ஆலோசனை தரும் பயிற்சியாளர் (இடது) (File)

பல்கேரியா வீராங்கனைக்கு ஆலோசனை தரும் பயிற்சியாளர் (இடது) (File)

Bulgarian Coach Throws Bottle In Ring Area During Women's World Boxing Championship Match | ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக பல்கேரியா பயிற்சியாளரின் அடையாள அட்டையும் பறிக்கப்பட்டது. #WomensWorldBoxingChampionship #AIBA

  • News18
  • Last Updated :
உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின்போது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் பாட்டிலை எறிந்த பல்கேரியா பயிற்சியாளரை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் 10-வது மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா உடன் மோதினார். விறுவிறுப்பாக இருந்த இந்த போட்டியில் 3-2 என இந்தியாவின் சோனியா வெற்றி பெற்றார்.

World Boxing Championship
எதிர் வீராங்னையை தாக்கும் இந்தியாவின் சோனியா (இடது) (Twitter/BoxingIndia)


பல்கேரியா வீராங்கனை தோல்வி அடைந்ததாக அறிவித்ததும் அதிருப்தி அடைந்த அந்த அணியின் பயிற்சியாளர் பேடார் லிசோவ், தண்ணீர் பாட்டிலை ரிங் (மைதானம்) பகுதியில் எறிந்தார். இதனால், போட்டி நடைபெற்ற இடத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.

வெற்றியை அறிவிக்கும் நடுவர் (Twitter/BoxingIndia)


இந்த விவகாரம் குறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக பேடார் லிசோவை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது அடையாள அட்டையும் பறிக்கப்பட்டது. இதனால், எஞ்சிய போட்டிகளின்போது அவரால் மைதானத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க...

Published by:Murugesan L
First published:

Tags: World Boxing Championship

அடுத்த செய்தி