ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விதைக்கப்பட்ட கறுப்பு முத்து.. மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற பீலே..!

விதைக்கப்பட்ட கறுப்பு முத்து.. மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற பீலே..!

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு இறுதி மரியாதை

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு இறுதி மரியாதை

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல், உலகின் உயரமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, India Brazil Brazil

கால்பந்தாட்டத்தின் கடவுள், உலக கால்பந்தாட்டத்தின் கறுப்பு முத்து என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர் பீலே. பிரேசிலில் 1940ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி Tres Coracoes நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பீலே, 1958ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றார். காலிறுதிப் போட்டியில் பம்பரமாய் சுழன்ற பீலே, அரையிறுதியில் பிரான்சுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து வியக்க வைத்தார்.

இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 5-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பிரேசில் அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து 1962, 1970 ம் ஆண்டுகளில் பீலே பங்கேற்று மொத்தம் 3 உலகக்கோப்பையை பிரேசிலுக்கு பெற்றுத் தந்து உலகின் கவனத்தை ஈர்த்தார். அடுத்தடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் பீலே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. தனது வாழ்நாளில் பிரேசிலுக்காக 95 போட்டிகளில் விளையாடிய பீலே, 77 கோல்களை அடித்துள்ளார். கிளப் அணிகள் உட்பட முதல்தர கால்பந்து போட்டிகளில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை ஆயிரத்து 282. அவர் கால்பந்தாடி அரைநூற்றாண்டு கடந்த பின்னரும் அவரின் புகழ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எப்போதும் ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

புற்றுநோய் காரணமாக ஒரு மாதமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் தனது 82வது வயதில் கடந்த டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அவர் முதன் முதலில் விளையாடி பிரபலமான சாண்டோஸ் நகரில் உள்ள விலா பெல்மிரோ விளையாட்டரங்கில் வைக்கப்பட்டது. அங்கு பிரேசில் அதிபர் லூயில் இன்னாசியோ உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடலுக்கு, வழி நெடுகிலும் ரசிகர்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, சான்டோஸில் உள்ள உலகின் மிகஉயரமான கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

First published:

Tags: Football