நிற வெறிக்கு எதிராக குரல் கொடுக்க நாங்களும் தயார் - இங்கிலாந்து வீரர்கள்

மாதிரி படம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் நிற வெறிக்கு எதிரான  Black Lives Matter என்ற வாசகத்துடன் களமிறங்குவதாக தெரிவித்துள்ளது.

  • Share this:
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீசார் நிற வெறியுடன் தாக்கி படுகொலை செய்ததை எவரும் எளிதில் மறந்திருக்க முடியாது.  இதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நிற வெறிக்கு எதிராகவும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குரல் கொடுத்தனர். அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்துவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது Black Lives Matter என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் களமிறங்குவதாக அந்நாட்டு அணியின் கேப்டன் ஹோல்டர் தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தாங்களும் நிற வெறிக்கு எதிரான வாகத்துடன் கூடிய ஜெர்ஸி அணிய தயார் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி நிற வெறிக்கு எதிரான வாசகத்துடன் களமிறங்குவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Also read... தமிழகத்தில் 4 மாதங்களில் ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கவலை தரும் ’இந்த’ எண்ணிக்கை

கொரோனோ காலத்தில் ஐந்து மாதத்திற்கு பிறகு  இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 8 ம் தேதி சௌத்தாம்ப்டனில் தொடங்குகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: