அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய டெல்லி பாஜக எம்.பி கவுதம் காம்பீர்!

கவுதம் காம்பீர்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. ராமர் கோவில் கட்டுமானத்திற்காக பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

  • Share this:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் காம்பீர் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னையாகும். இதனால் இரு மதப் பிரிவுக்கு இடையே மோதல் சூழல் உருவானது. ஒரு வழியாக இப்பிரச்னைக்கு 2019ல் முடிவு கிடைத்தது. இரு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பரபரப்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 2019 நவம்பர் 9ம் தேதியன்று வழங்கியது.

அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியதுடன், பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனையடுத்து ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. ராமர் கோவில் கட்டுமானத்திற்காக பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும், டெல்லி எம்.பி கவுதம் காம்பீர் இன்று தனது பங்களிப்பாகவும், தனது குடும்பத்தினரின் பங்களிப்பாகவும் ராமர் கோவில் கட்ட ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

‘ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. நீண்ட கால பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இது ஒற்றுமை மற்றும் அமைதிக்கு வழிவகுக்கும். அதற்கான ஒரு சிறிய பங்களிப்பாக இன்று நான், என் குடும்பத்தின் சார்பில் இதனை வழங்குகிறேன்’ என டெல்லி எம்.பி கவுதம் காம்பீர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோவில் கட்டுமானத்திற்காக நன்கொடை அளிக்கும் இயக்கத்தை டெல்லி பாஜக தொடங்கியுள்ளது. அதன்படி ரூ. 10, ரூ.100, ரூ.1,000 கூப்பன்கள் மூலம் நன்கொடைகளை ஒவ்வொரு வீடாக சென்று திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி கோவில் கட்டுமானத்திற்கு பொதுமக்கள் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். எனவே இதனை தொடங்கியிருப்பதாக டெல்லி பாஜக பொதுச் செயலாளர் குல்ஜீத் சாஹல் தெரிவித்தார்.
Published by:Arun
First published: