கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: நாடு முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கேற்பு!
கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: நாடு முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கேற்பு!
முதல் போட்டியில் அசாம் அணியை வீழ்த்தியது பீகார் அணி
Kovilpatti Hockey Tournament 2022: கோவில்பட்டியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் 12வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி இன்று தொடங்கி 13 நாட்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி முதல் போட்டியில் பீகார் அணி வெற்றி பெற்றது.
கோவில்பட்டியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் 12வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி இன்று தொடங்கி 13 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்த 30 அணிகள் பங்கேற்றுள்ளன. 540 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் 8 பிரிவுகளில் 50 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் முதல் போட்டியில் அசாம் அணியுடன் மோதிய பீகார் அணி 11-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியை 5-0 என்ற கோல்கணக்கில் அருணாச்சல பிரதேசம் அணி வீழ்த்தியது.
அடுத்த ஆட்டத்தில் 10-0 என்ற கணக்கில் கோவா அணியை ஜார்க்கண்ட் அணி தோற்கடித்தது. இந்த லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு காலிறுதி, அரையிறுதி போட்டிகள் நடத்தப்படும். அதை தொடர்ந்து வரும் 29ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.